இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!

  புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர் !   பாடியவர் : கபிலர் . பாடப்பட்டோன் : வேள் பாரி . திணை : நொச்சி . துறை : மகண் மறுத்தல் . பாரியின் பறம்புநாடு இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளது . மூன்று வேந்தர்களும் இதனை முற்றுகை இட்டிருக்கிறீர்கள் . உங்கள் முற்றுகை அதனை ஒன்றும் செய்ய இயலாது . காரணம் உழவர் விளைவித்துத் தராத நான்கு வகை யான வளங்கள் இதன்கண் உள்ளன . ஒன்று , மூங்கில் நெல் விளைகிறது . இரண்டு , பலாப்பழம் உண்டு . மூன்று , வள்ளிக்கிழங்கு உண்டு . நான்கு , ஓ ரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள் உண்டு . வான் போன்று பரந்த இடத்தைக் கொண்டது அவன் மலை . வானத்து மீன்கள் போல் அதில் சுனைகளும் உண்டு . இப்படிப்பட்ட அவன் மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர் யானைகளைக் கட்டிவைத்தாலும் , இடமெல்லாம் தேரை நிறுத்திவைத்தாலும் , உங்கள் போர் முயற்சியால் அதனைக் கொள்ள முடியாது . வாள் வீசிப் போரிட்டாலும் அவன் தரமாட்டான் . அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு உரிய வழி ஒன்று உண்டு . அதனை நான் அறிவேன் . யாழ் ...

புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!

  புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும் ! பாடியவர் : கோவூர் கிழார் . பாடப்பட்டோன் ; சோழன் நலங்கிள்ளி . திணை : பாடாண் .  துறை : பாணாற்றுப்படை .                  பாண ! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல் ,  உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய் ?  அணிகலன்களை அணிந்த , அழகிய , பெரிய , மார்பில் சிவந்த புள்ளிகளை ( தேமல் ) உடையவன் நலங்கிள்ளி .  அவன் மென்மையான   மகளிரிடம்   பணிவாகவும் , வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன் .  அவன் , குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல் , நீர்ப் பெருகிய காவிரி , வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன் .  தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால் ,  பறவைகளால் நிகழும் தீய நிமித்தங...