இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Women Problems and solutions in Prabanjan Novel

பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும்   புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் ப . செல்வி , உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி , கோவை -641044 பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும்   புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் பெண்களுக்கு வீட்டுக்குள்ளேயும் பொது இடங்களிலும் சிக்கல்கள் மிகுதியாக உள்ளன . பெண்களைக் குடும்பத்தில் அடிமைகளாக நினைத்து அவர்களை இழிவாக நடத்தும் நிலையே வேதகாலமுதல் இன்றுவரை நிலவிவருகிறது . இந்நிலை மாறவேண்டும் . மனிதனின் சிக்கல்களை ஆழமாகவும்அழுத்தமாகவும்   வெளியிடுவதற்குப் புதினம் சிறந்த களமாக அமைகிறது . அவ்வகையில் பிரபஞ் ; சனின் கனவு மெய்ப்படவேண்டும் புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களையும் அச்சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் காண்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும் . மகளிர் சிக்கல்கள்        மகளிர் சிக்கல்களை இருவகையாகப் பிரிக்கலாம் . அவை அகச் சிக்கல்கள...