இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் தாய் - பாரதியார்

 முனைவர் ப.செல்வி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 எங்கள் தாய்   முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய். எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய் . ஆனாலும் இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பாள் எங்கள் தாய்.   முப்பது கோடி மக்களை உடையவள் - தற்போது நூறு கோடிக்கும் மேலாகச் சென்றுவிட்டது - ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக உடையவள் . இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள். இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள் . கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள் . அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள் . தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள் அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்...