இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

  மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை சீத்தலைச் சாத்தனார் முனைவர் ப.செல்வி  இணணப்பேராசிரியர் ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை   ஆதிரையின் செய்தியைக் கேள் என்று சொல்லிக்கொண்டு அறவண அடிகள் மணிமேலைக்குக்கூறுகிறார் .  சாதுவனின் தீ நடத்தையால் செல்த்தை இழத்தல் ஆதிரையின் கணவன் சாதுவன் . அவன் தகைமை இல்லாதவனாக ஆதிரையை விட்டுவிட்டுக் கணிகை ஒருத்தியோடு வாழ்ந்துகொண்டு வட்டாட்டத்திலும் சூதாட்டத்திலும் தன்னிடமிருந்த வானளாவிய செல்வத்தை இழந்துவிட்டான் .  சாதுவன் பொருளீட்டச் செல்லுதல் அதனால் உறவினர்களும் , அவனைப் பேணிவந்த கணிகையும் அவனைக் காசு இல்லாதவன் என்று கைவிட்டு விட்டனர் . அதனால் வங்கக் கப்பலில் பொருளீட்டச் செல்லும் வணிகர்களுடன் சேர்ந்து பொருளீட்டும் ஆசையில் சென்றான் .  சாதுவன்சென்ற கப்பல் கவிழ்தல்              நள்ளிரவில் புயல் வந்து கப்பலைக் கவிழ்த்தது . அதில் ஒடிந்த மரத்துண்டுகளைப் பற்றிக்கொண்டு சிலர் உயிர் தப்பினர் .  சாத...