இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பாடல்கள்

                                                   சித்தர் பாடல்கள் பாம்பாட்டி சித்தர்    நாடு நகர் வீடு மாடு முதலான பொருட்கள் எல்லாம் எமன் வரும் போது நம்முடன் கூட வருமா என்றால் வராது உடலிலிருந்து உயிர் போனபின் என்ன பயன் உண்டாகும் என்பதை உணர்ந்து நின்று ஆடு பாம்பே.  யானைப் படை சேனை படை தேர்ப்படை குதிரைப்படை இவையாவும் எமன் வரும் பொழுது நமக்கு துணை நிற்காது என்பதை உணராமல் ஞானம் சிறிதும் இல்லாத நாய்கட்கு புத்தி தேடி வரும்போது நீ நின்று ஆடு பாம்பே.  நீரில் தோன்றும் குமிழி ஆனது அப்போதே  நிலை இல்லாமல் போவதை போல் இந்த உடல் உயிர் போனபின் நிலை இல்லாமல் போய்விடுகிறது என்பது உறுதி. என்று உலகில் பல உயிர்களைப் படைத்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நீ நின்று ஆடு பாம்பே.  நாறுகின்ற மீனை பலதரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் தனது இயல்பான நாற்றம் போகாது அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு நீங்காது. என...