காளமேகப்புலவர் பாடல்கள்
முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 காளமேகப்புலவர் பாடல்கள் காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் பொழிவதைப் போன்று இயல்பாக விரைந்து கவிபாட வல்லவர். சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பாடும் திறம் மிக்கவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு திருவானைக்கா உலா, பரபிரம்ம விளக்கம் சமுத்திர விலாசம் . சித்திர மடல் போன்ற சிற்றிலக்கியங்களையும் 220 தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் உள்ள ஒற்றுமை பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும் அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம் தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில் பாம்பும் எலுமிச்சம் பழம். பாம்பு பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது எலுமிச்சம்பழம் எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் ப...