இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காளமேகப்புலவர் பாடல்கள்

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044   காளமேகப்புலவர் பாடல்கள் காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் பொழிவதைப் போன்று இயல்பாக விரைந்து கவிபாட வல்லவர். சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பாடும் திறம் மிக்கவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு திருவானைக்கா உலா, பரபிரம்ம விளக்கம் சமுத்திர விலாசம் . சித்திர மடல் போன்ற சிற்றிலக்கியங்களையும் 220 தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் உள்ள ஒற்றுமை பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும் அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம் தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில் பாம்பும் எலுமிச்சம் பழம். பாம்பு   பாம்பு  பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது எலுமிச்சம்பழம்   எலுமிச்சம்பழம்  பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் ப...

நற்றிணை - 110. பாலை

  நற்றிணை - 110. பாலை   முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி 'நீ உண்ணுவாய்' என்றதன் விடையாக; யான் உண்ணேன் காண்!" என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; நல்ல அறிவும் ஆசாரமும் எப்படி உணர்ந்தனளோ? கொண்டகொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் தன்கை பற்றிய கொழுநன் குடி வறுமையுற்றதாகத் தன்னை ஈன்றுதவிய தந்தையினது செல்வமிக்க உணவை நினைகிலளாகி; ஓடுகின்ற நீரிலே இடையீடுற்றுக் கிடக்கும் நுண்ணிய மணல் போல ஒரு பொழுதின்றி யொர...