மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை புத்த பீடிகையை வணங்குதல் புத்மபீடத்தைக் கண்டதும் மணிமேகலை தன்னையறியாமல் தனது காந்தள்மலர்போன்ற கரங்களைத் தலைக்குமேலாகக் குவித்து வணங்கினாள். நெஞ்சம் உருகி அவள் சிந்திய கண்ணீர் மார்பில் விழுந்து அவளுடைய மார்பினை நனைத்தது. ஒருவிதப் பரவசநிலையுடன் மெல்ல அடியெடுத்து அந்தப் பீடத்தை இடமிருந்து வலமாக மூன்றுமுறை சுற்றிவந்தாள். மின்னல்கொடி மேகத்திலிருந்து தரையில் வீழ்ந்ததுபோல தரையில் வீழ்நதாள் மணிமேகலை. அப்போது புத்தமதநெறியில் ஒழுகிய பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் ஒருவன் அவளுடைய முற்பிறவியில் கூறியது நினைவில் எழுந்தது. பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் கூறியது “வணங்குவதற்குரிய அறிய தவநெறியாளனே! உறுதியான மெய்ப்பொருளை உணர்ந்தவனே. அவந்திநாட்டு மன்னனிடம், காயங்கரை ஆற்றங்கரையில் நீ கூறிய அத்தனையும் சொன்னவண்ணமே நடந்ததைத் தெளிவாக அறிந்துகொண்டேன். அந்த மன்னன் உன்னிடம் அறநெறிகளைக் கேட்டசமயம் நீ கூறியது எனக்கு நினைவில் உள்ளது. ‘ நாவல்மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள இந்த தீவில் அன்றைய தினத்திலிருந்து ஏழாவது...