சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை
சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை
ஆசிரியர் - இளங்கோவடிகள்
மாலை பொழுதில் இறைவனை வணங்குதல்
அகன்ற மாளிகையில் மகளிர் நெல்லையும் முல்லை மலரையும் தூவி பகல் முடிந்த மாலைப்பொழுதிலே அழகிய ஒளிவிளக்குகளை ஏற்றி கொடி போன்ற இடையுடைய பெண்கள் இரவிற்கேற்ப உடைய அணிந்து மாலை பொழுதில் இறைவனை வணங்கினர்.
மாலதியின் வரலாறு
மாலதி என்ற பெண் மாற்றாளின் குழந்தைக்ப் பால் ஊட்ட குழந்தை பால் விக்கி இறந்தது. கணவனும் மாற்றாலும் தன் மீது பழி சுமத்துவார்கள் என்று மாலதி கலங்கினாள். மாலதி இறந்த குழந்தையைக் கையில் ஏந்தி கற்பகக் கோயில் வெள்ளானை கோயில் சூரியன் கோயில் முருகவேல் கோயில் என பல்வேறு கோயில்களுக்கும் குழந்தையை எடுத்துச் சென்று இந்த பழியைப் போக்க வேண்டும் என வேண்டினாள். ஆனால் அவள் துயர் தீரவில்லை. இறுதியில் பாசண்ட சாத்தன் கோயிலுக்குக் குழந்தையை எடுத்துச் சென்று வேண்டும்போது அங்கு இடாக்கினிப் பேய் இளம் பெண் உருவில் வந்து குழந்தையைப் பறித்து சென்றது.
மாலதியின் துன்பம் தீர்த்தல்
பாசண்ட சாத்தன் மாலதியின் முன் தோன்றி அவளுடைய துயரத்தை போக்குவதாகக் கூறியது. இறந்த குழந்தையை குயில் கூவும் சோலையில் உயிருடன் கண்டெடுப்பாய் என்று கூறி மறைந்தது. அவளும் அவ்வாறே அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து குழந்தையை அன்போடு எடுத்துத் தாயின் கையில் கொடுத்தாள்.
பாசண்ட சாத்தன்
குழந்தையாக மாறிய அந்த பாசண்ட சாத்தன் பெரியவனாகி வளர்ந்து பிரம்மச்சரிய நிலையில் கல்வி கேள்விகளில் சிறந்து பொருளீட்டி பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து பின் பெற்றோர் இறந்தபின் அவர்களுக்கு இறுதி கடன்களை செய்து தேவந்தியுடன் எட்டு ஆண்டுகள் இல்லறம் நடத்தி வாழ்ந்து வந்தான். பின் இளமை உருவத்தைக் காட்டி என் கோட்டத்திற்கு நீவா என மறைந்து சென்றான். தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றுள்ளான் என்றும் அவனை மீட்கும் பொருட்டு நாள்தோறும் வழிபாடு மேற்கொள்வதாக கோயிலுக்கு செல்வதாக போலிக் காரணத்தை கூறினாள் தேவந்தி.
தேவந்தியின் அறிவுரை
தேவந்தி கண்ணகியின் தோழி. தன்னைப் போலவே கண்ணகியும் கணவனைப் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தாள் என்பதை அறிந்து வருந்தி கண்ணகியிடம் சென்று அவளைக் கண்டு அருகம்புல், சிறுபூளைப்பூ நெல் மூன்றையும் தூவி வழிபட்டால் நீயும் பிரிந்த உன் கணவனை மீண்டும் பெறுவாய் என்று வாழ்த்தி அறிவுரை கூறினாள்.
கண்ணகி கண்ட கனவு
இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது முதல் நாள் கண்ட கனவை தேவந்திக்குக் கூறினாள். கோவலன் கையைப் பற்றிய நிலையில் இருவரும் பெரிய நகரத்தில் புகுதல் அங்கு பொருந்தாத பழி அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. தேள் கொட்டியதைப் போன்று துன்புற்றார்கள். இந்தப் பழியின் காரணமாகக் கோலனுக்குத் தீங்கு ஏற்படுகிறது. இந்தத் தீங்கை பிறர் கூற கண்ணகி அரசன் முன் சென்று வழக்குரைக்கின்றாள். நீதி கேட்கிறாள் அரசனோடு அவ்வூருக்கும் அவளால் தீங்கு நேர்கிறது. கண்ணகி தான் கண்ட கனவைத் தோழிக்கு கூறுகிறாள். நீ முற்பிறவியில் மேற்கொண்ட நோன்பில் தவறு செய்துள்ளாய். இப்படி வருந்துகிறாய் என்று கூறி தேவந்தி அவளுக்கு அறிவுரை கூறினாள். கணவனைப் பிரிந்த தேவந்தி கணவனைச் சென்று அடைவதற்குக் காவிரி நிலையில் கடலோடு கலக்கும் இடத்தில் சோலைகளின் நடுவே உள்ள சோமகுண்டம் சூரிய குண்டம் எனும் இரண்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி அருகில் உள்ள மன்மதன் கோவிலுக்கு சென்று வணங்கினால் கணவனோடு பிரிவின்றி வாழ்வர் மேலும் மறு பிறப்பில் நன்கு விளைகின்ற பூமியில் தேவராக பிறந்து கணவனோடு இன்பமாக வாழ்வாய் என்று அறிவுரை கூறுகிறாள். ஆனால் கண்ணகி பீடென்று என மறுத்துவிடுகிறாள்.
கோவலன் வருகை
கோவலன் வருகை கண்ணகி தேவந்தியோடு உரையாடிக் கொண்டிருந்தபோது கோவலன் வருகிறான் அவன் வருகையை வேலைக்காரச் சிறுமி வாயிலாக அறிகிறாள். தன் நிலத்தின் வாயில் காப்போன் போன்று இருந்த கோவலன் நேரே கண்ணகியிடம் சென்று வருந்தினான்.
வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நன்குடியில் பிறந்தும் பெரியோர்கள் இஈட்டி வைத்திருந்த மலை போன்ற செல்வத்தைத் தொலைத்துவிட்டு. வரியவனாக வந்து நிற்கின்றேன் எனக்கு அவமானமாக இருக்கின்றது என்று கோவலன் வருந்தினான். சிலம்பு உள்ளது என்று கண்ணகி அதை கொடுக்கின்றாள் கணவனின் கருத்தை அறிந்து சிலம்பை கொடுக்கின்றாள். சிலம்பை முதலீடாகக் கொண்டு இழந்த செல்வத்தை மீட்போம் என்று மதுரைக்குப் பயணம் செல்கின்றனர். இருவரும் பொழுது விடியும் முன்னே மதுரை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக