தமிழ் நாடகத்தின் - தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நாடகத்தின் - தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும் . தமிழ் மொழி இயல் , இசை , நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது . இவற்றுள் நாடகம் தொன்மையும் , தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும் . இயலும் , இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும் . எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும் . தெருக்கூத்துகளாக இருந்து , மேடைநாடகங்களாக மாறி , இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து காணலாம் . தமிழ்நாடகத்தின் தொன்மை தொல்காப்பியர் ” நாடக வழக்கினும் ” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார் . சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது . அகத்தியம் , கூத்தநூல் , மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். குறவைக் கூத்து , துணங்கைக் ...