இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

  பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை   ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை புத்த பீடிகையை வணங்குதல் புத்மபீடத்தைக் கண்டதும் மணிமேகலை தன்னையறியாமல் தனது காந்தள்மலர்போன்ற கரங்களைத் தலைக்குமேலாகக் குவித்து வணங்கினாள். நெஞ்சம் உருகி அவள் சிந்திய கண்ணீர் மார்பில் விழுந்து அவளுடைய மார்பினை நனைத்தது. ஒருவிதப் பரவசநிலையுடன் மெல்ல அடியெடுத்து அந்தப் பீடத்தை இடமிருந்து வலமாக மூன்றுமுறை சுற்றிவந்தாள். மின்னல்கொடி மேகத்திலிருந்து தரையில் வீழ்ந்ததுபோல தரையில் வீழ்நதாள் மணிமேகலை.   அப்போது புத்தமதநெறியில் ஒழுகிய பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் ஒருவன் அவளுடைய முற்பிறவியில் கூறியது நினைவில் எழுந்தது. பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் கூறியது “வணங்குவதற்குரிய அறிய தவநெறியாளனே! உறுதியான மெய்ப்பொருளை உணர்ந்தவனே. அவந்திநாட்டு மன்னனிடம், காயங்கரை ஆற்றங்கரையில் நீ கூறிய அத்தனையும் சொன்னவண்ணமே நடந்ததைத் தெளிவாக அறிந்துகொண்டேன். அந்த மன்னன் உன்னிடம் அறநெறிகளைக் கேட்டசமயம் நீ கூறியது எனக்கு நினைவில் உள்ளது. ‘ நாவல்மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள இந்த தீவில் அன்றைய தினத்திலிருந்து ஏழாவது...

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

  கனாத்திறம் உரைத்த காதை  ஆசிரியர் -  இளங்கோவடிகள்       புகார்நகரம் மாலைப்பொழுது புகார்நகரம் மாலைப்பொழுது மங்கலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது ; வீடுகள் பொலிவுடன் விளங்கின. வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர். வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்தனர். அந்த மாலைப் பொழுது தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் கண்ணகிக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள். மாலதியின் வரலாறு மாலதி என்பவள் ஒருத்தி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன் மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி   உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள். பின்பு பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை அடைந்தாள். அங்கே அவள் வரம் வேண்டிப் பாடு கிடந்தாள். அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து , “ தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தரமாட்டர்கள்” என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தன் வயிற்று அகத்து இட்டு விழுங்கி விட்டது. உயிர் நீங்கிய உடலும் அடையா...

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

 சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை ஆசிரியர் - இளங்கோவடிகள் மாலை பொழுதில் இறைவனை வணங்குதல் அகன்ற மாளிகையில் மகளிர் நெல்லையும் முல்லை மலரையும் தூவி பகல் முடிந்த மாலைப்பொழுதிலே அழகிய ஒளிவிளக்குகளை ஏற்றி கொடி போன்ற இடையுடைய பெண்கள் இரவிற்கேற்ப உடைய அணிந்து  மாலை பொழுதில் இறைவனை வணங்கினர். மாலதியின் வரலாறு  மாலதி என்ற பெண் மாற்றாளின் குழந்தைக்ப் பால் ஊட்ட  குழந்தை பால் விக்கி இறந்தது. கணவனும் மாற்றாலும் தன் மீது பழி சுமத்துவார்கள் என்று மாலதி கலங்கினாள். மாலதி இறந்த குழந்தையைக்  கையில் ஏந்தி கற்பகக் கோயில் வெள்ளானை கோயில் சூரியன் கோயில் முருகவேல் கோயில் என பல்வேறு கோயில்களுக்கும் குழந்தையை எடுத்துச் சென்று இந்த பழியைப் போக்க வேண்டும் என வேண்டினாள். ஆனால் அவள் துயர் தீரவில்லை. இறுதியில் பாசண்ட சாத்தன் கோயிலுக்குக் குழந்தையை எடுத்துச் சென்று வேண்டும்போது அங்கு இடாக்கினிப் பேய்  இளம் பெண் உருவில் வந்து குழந்தையைப்  பறித்து சென்றது.   மாலதியின் துன்பம் தீர்த்தல்  பாசண்ட சாத்தன் மாலதியின் முன் தோன்றி அவளுடைய துயரத்தை போக்குவதாகக் கூறியது....

கம்பராமாயணம் - திருவடி தொழுத படலம்

  கம்பராமாயணம்   - திருவடி தொழுத படலம் அனுமன் இலங்கையில் இருந்த குன்று ஒன்றின் மீது ஏறி , வானில்  தா வி , மைந்நாகம் என்கின்ற மகேந்திர மலையில் குதித்தான்.   அங்கு அனுமன் வரவினை படையினர் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்   தாய் வரக் கண்ட பறவை போல மகிழ்ந்தனர்   அழுதும் , தொழுதும் , தழுவியும் வரவேற்றனர்   உன் வெற்றியை உன் முகமே காட்டுகிறது . தேன் , கிழங்கு , காய் தேடி வைத்திருக்கிறோம் . உண்க - என்றனர்   அனுமன் உடலில் இருக்கும் காயங்களைப் பார்த்து வருந்தினர்   உச்சிப் பொழுதில் மதுவனம் வந்தனர்   அங்கதனிடம் செல்வோம் என்றனர்   படையினர்க்குத் தேன் வழங்கும்படி அனுமன் கூறினான்   குரங்குகள் மரங்களை ஒடித்துத் தேன் உண்டன   தேனைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்   ததிமுகன் மதுவனம் காத்தது வனம் காவலன் சினந்தனன்    சுக்கிரீவன் ஒப்புதல் இல்லாமல் மரங்களை ஏன் ஒடித்தீர் என்றனர் வனம் காவலன் ததிமுகன்   வாலி மகன் அங்கதனைக் காட்டினர்   தந்தையை இ...