கம்பராமாயணம் - திருவடி தொழுத படலம்

 

கம்பராமாயணம்  - திருவடி தொழுத படலம்

அனுமன் இலங்கையில் இருந்த குன்று ஒன்றின் மீது ஏறி, வானில் தாவி, மைந்நாகம் என்கின்ற மகேந்திர மலையில் குதித்தான். 
அங்கு அனுமன் வரவினை படையினர் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர் 
தாய் வரக் கண்ட பறவை போல மகிழ்ந்தனர் 
அழுதும், தொழுதும், தழுவியும் வரவேற்றனர் 
உன் வெற்றியை உன் முகமே காட்டுகிறது. தேன், கிழங்கு, காய் தேடி வைத்திருக்கிறோம். உண்க -என்றனர் 
அனுமன் உடலில் இருக்கும் காயங்களைப் பார்த்து வருந்தினர் 

உச்சிப் பொழுதில் மதுவனம் வந்தனர் 
அங்கதனிடம் செல்வோம் என்றனர் 
படையினர்க்குத் தேன் வழங்கும்படி அனுமன் கூறினான் 
குரங்குகள் மரங்களை ஒடித்துத் தேன் உண்டன 
தேனைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர் 

ததிமுகன் மதுவனம் காத்தது

வனம் காவலன் சினந்தனன்  
சுக்கிரீவன் ஒப்புதல் இல்லாமல் மரங்களை ஏன் ஒடித்தீர் என்றனர்
வனம் காவலன் ததிமுகன் 
வாலி மகன் அங்கதனைக் காட்டினர் 
தந்தையை இழந்த மகன் போலும் என்று நினைத்தான் 
அங்கதனை வணங்கினான்
வாலிக்கு இந்திரன் தந்த வனம் இது என்றான் 

போர்

அரசனிடம் என்னை மாட்டிவைத்தாயே என்று சினந்த ததிமுகன் பாறை ஒன்றைத் தூக்கி அங்கதன் மேல் எறிந்தான். அதனைப் புறங்கையால் தடுத்த அங்கதன் ததிமுகனைக் குத்தினான் 
ததிமுகன் மலை ஒன்றைத் தூக்கி அடித்தான் 
குன்றைத் துகளாக்கிய அங்கதன் அவன் மார்பில் குத்தததிமுகன் ஓடிவிட்டான் 
ததிமுகன் படையினர் அங்கதனைக் குத்துங்கள் என்றனர் 
படையினர் அங்கதனைக் கொடிகளால் கட்டினர். குத்தினர். அங்கதன் தன்னை விடுவித்துக் கொண்டான்
அங்கதன் படை தேன் உண்டு மகிழ்ந்தது 
சீதையைத் தேட அனுமனை அனுப்பிய சுக்கிரீவன் அவன் வரவுக்காக, காத்திருந்தான் தென்திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் 

ததிமுகன் முறையீடு

குருதி வழிய, தப்பி வந்த ததிமுகன் சுக்கிரீவனை பணிந்தான் வனம் அழிந்தது பற்றிக் கூறினான். அழித்தது யார் என்று வினவினான் நீலன், குமுதன், சாம்பன் படை என்றான்ததிமுகன் 19-3அங்கதன பற்றியும் கூறினான் என்னைக் குத்தி, உன்னிடம் சொல்லுமாறு அனுப்பினான் என்றான் என்று ததிமுகன் கூறியதைக் கேட்ட சுக்கிரீவன் நிலைமையைப் புரிந்துகொண்டான்சீதையைக் கண்ட மகிழ்ச்சியில் மதுவனத்தை அழித்திருக்கிறான் கவலை வேண்டாம் என்றான் சுக்கிரீவன்  ததிமுகனிடம் அழித்தவர் ஆர் என வினவ அனுமன், அங்கதன், மயிந்தன், சாம்பவன் என்றான் ததிமுகன் அவர்கள் அடாது செய்யமாட்டார்கள் என்றான் சுக்கிரீவன் சீதையைக் கண்டு வந்தவரை நாம் குறை ஒன்றும் சொல்லக் கூடாது அல்லாமலும் அவன் இளவரசன் திரும்பிச் சென்று வணங்கி அவனைப் போற்று என்று ததிமுகனுக்கு அறிவுறுத்தினான் ததிமுகன் வாயைப் பொத்திக்கொண்டு திரும்பினான் 

அனுமன்

மீண்ட ததிமுகன் அங்கதனைத் தொழுதான் 

நிகழ்ந்த செயலுக்கு இருவரும் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்

அனுமனை முன்னே செல்லும்படி அனுப்பினர் 
எல்லார் துன்பமும் நீங்கிற்று 
இராமன் சுக்கிரீவனை வினவினான் 

அனுமன் விடை பகர்ந்தான்


அனுமன்  அங்கதன் , சாம்பவான் ஆகியோரை முறையே வணங்கிய பின்னர் மற்றவர்களையும் வணங்கி, "சீதை நல்லது சென்னாள்" என்றான்

கேட்டவர் மகிழ்ந்தனர். நிகழ்ந்தனவற்றைக் கூறுமாறு வேண்டினர் 
சீதை தவமிருப்பதையும், அரக்கரோடு போரிட்டதையும்இலங்கையை எரித்ததையும் சொல்ல நாணினான் 
குறிப்பால் அவர்கள் அவற்றை, உடம்பிலுள்ள புண் முதலியவற்றால் அவர்கள் உணர்ந்துகொண்டனர். இனி,காலம் தாழ்த்த வேண்டாம். இராமனிடம் சொல்வோம் என்று அனுமன் முதலானோர் எண்ணினர் 
அனுமனை முன்னே செல்லுமாறு அவர்கள் வேண்ட அனுமன் சென்றான் 

இனி இராமன் நிலை பற்றிப் பேசுவோம் 
காலம் செல்லச் செல்ல இராமன் கலங்கிக் கொண்டிருந்தான் 
3 திசையிலும் சீதை இல்லை என்ற செய்தி கேட்டு, தென்திசை சென்ற அனுமனைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான் 
சுக்கிரீவனிடம் சொன்னான் 

சொன்ன காலம் முடிந்துவிட்டது. தென்திசை சென்றவர் வரவில்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்றோ 
சீதை மாண்டாள் என்னும் செய்தியைத் தெரிவிக்க மனம் இல்லாமல் மாண்டுவிட்டார்களோ. இராவணனால் சிறை பிடிக்கப் பட்டார்களோ 
போரிட்டு மாண்டு போனார்களோ 
காலம் கடந்துவிட்டது என்று சொல்ல மனம் இல்லாமல் தவம் செய்கிறார்களோ? யாது நேர்ந்ததோ என்று இராமன் சுக்கிரிவனை வினவினான் 

 

அனுமன் தென்திசையில் உள்ளதை சுக்ரீவன் நினைவுபடுத்தினான் 
அனுமன் வந்தான்இராமனை வணங்காமல் சீதை இருக்கும் தென்திசையை வணங்கினான். இராமன் அனைத்தையும் குறிப்பால் உணர்ந்துகொண்டான் 
மகிழ்ந்தான்.

 கண்டேன் 
கற்பினுக்கு அணிகலனாக விளங்குபவளைக் கண்டேன் 
கண்களால் கண்டேன் 
இலங்கையில் கண்டேன் - என்றான் அனுமன் 

உனக்கு மனைவி
உன் தாய்க்கு மருமகள் 
சனகன் மகள் - என்று பெருமை கொள்ளும்படி இருக்கும் தெய்வத்தைக் கண்டேன்.  என்றான்.
பொன்னுக்கு நிகரான பொன் இல்லை 
பொறுமைக்கு நிகர் சீதை அல்லது இல்லைஎன்றான்.
உன் குலத்தையும், தன் குலத்தையும் உயர்த்திக்கொண்டிருக்கிறாள்
இலங்கை மலை ஒன்றில் தவம் செய்துகொண்டிருக்கிறாள் 
குடிப்பிறப்பு, பொறுமை, கற்பு ஆகியவற்றைக் காக்கும் தவம் செய்துகொண்டிருக்கிளாள். அவளது கண், கருத்து, எண்ணம் எல்லாவற்றிலும் நீயே இருக்கிறாய்என்றான். விரும்பாதவளைத் தொட்டால் தலை வெடித்துவிடும் 

இராவணன் பெற்றிருக்கும் வரம் 

 

அனுமன் இராமனிடம் கூறுகிறான் 

இலங்கை சோலையில் புல்லுக் குடிசையில் சீதை இருக்கிறாள் 
இராவணன் சீதையைப் பர்னசாலை மண்ணோடு தூக்கிச் சென்று அங்கே வைத்திருக்கிறான். விருப்பம் இல்லாதவளைத் தொட்டால், தன் தலை சுக்கு றாக வெடித்துவிடும் என்னும் சாபம் உடையவன் அவன். எனவே

கற்பினாள் சீதையைத் தொட அஞ்சுகிறான்

அவன் சீதையைத் தீண்டாமல் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. வானம் கிழிந்து விண்மீன்கள் உதிராமல் இருக்கின்றன
தொழத் தக்க சோகக் கற்பினளாய் வாழ்கிறாள். மூவர் முடிக்கும் மேலானவள்

சோலையில் கண்ணீர்க் கடலில் அவளைப் பார்த்தேன் 35
அளவற்ற அரக்கியர், பேய்கள் அவளைக் காத்து வருகின்றனர். தனிமையில் இருக்கிறாள் 

சீதையை வணங்க நான் காத்துக்ககொண்டிருந்தபோது இராவணன் அங்கு வந்தான். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வணங்கிக் கெஞ்சினான். சீதை கூறிய கொடுஞ்சொற்களைக் கேட்டு, சினத்துடன் சென்றுவிட்டான் 

கற்பும் அறனும் அவளைக் காத்துக்கொண்டிருக்கின்றன. தனக்கு இணங்கச் சொல்லும்படி அரக்கியரிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டான்

என் மந்திரத்தால் அரக்கியரை உறங்கும்படிச் செய்தேன் 

அப்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து, கொடி ஒன்றைத் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். அப்போது நான் உன் பெயரைச் சொன்னேன்

நீ அரக்கனே ஆயினும் ஆகுக. என் கணவன் பெயரைச் சொன்னாய் - என்று வாழ்த்திக்கொண்டு கண்ணீருடன் நின்றான் - என்றான் 

 

நீ சொன்ன அடையாளங்களைச் சீதை கேட்டாள் 
உன் மோதிரம் அவளுக்கு உயிர் தந்த மருந்து போல் ஆயிற்று 
அதனைத் மார்பினில் ஒற்றிக்கொண்டபோது அவளுக்கு உன்மீது இருந்த ஆசையைப் புரிந்து கொண்டேன் 
அதனைக் கண்ணீரால் நீராட்டினாள். பெருமூச்சு விட்டாள் 
நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியாமையால் காலம் தாழ்ந்தது என்னும் உன் வருத்தத்தையும் கூறினேன். அப்போது நல்லுணர்வு பெற்றாள்
இங்கு உள்ள நிலைமையை எல்லாம் கேட்டறிந்தாள்
ஒரு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பேன். மீட்காவிட்டால் மாள்வேன்என்றாள். 
துணியில் முடிந்து வைத்திருந்த சூடாமணியைத் தந்தாள் என்று சொல்லிக்கொண்டே அனுமன் சூடாமணியை இராமன் கையில் கொடுத்தான் 
திருமணத்தின்போது தீவலம் வந்தது இராமனுக்கு நினைவு வந்தது 
இராமனுக்கு மேனிமயிர் பொடித்தது. மார்பிலும் தோளிலும் வியர்வை 
சீதையைக் காணுதல் எளிமையாயிற்று. காலம் கடத்த வேண்டாம் - என்று சுக்கிரீவன் நினைவூட்டினான். இராமன் எழுந்தான்.
படை எழுக என்றான் சுக்கிரீவன் 
வள்ளுவன் முரசறைந்தான் 
படை தென்திசை நோக்கிச் சென்றது 
இலங்கையின் நிலை பற்றி அனுமன் விளக்கினான்
12 நாளில் கடற்கரைக்கு வந்தனர்

சீதை உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்
மகளிர் அவளுக்குக் காப்பாக உள்ளனர்
அங்கதன் முதலானோரும் வந்து சேர்ந்தனர் 
படை செல்லல்

நீலனைப் படையுடன் முன்னே செல்லும்படி இராமன் பணித்தான் 

அனுமன் இராமனைத் தோள் மேல் தூக்கிக்கொண்டான் 
அங்கதன் இலக்குவனைத் தூக்கிக் கொண்டான் 

புலவர் வாழ்த்த வானில் சென்றனர் 
கனி, கிழங்கு, தேன் இருக்கும் வழியில் படை சென்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்