சிறுபாணாற்றுப் படையில் இயற்கை வளங்கள்
முனைவர் ப.செல்வி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044
சிறுபாணாற்றுப் படையில் இயற்கை வளங்கள்
சிறுபானாற்றுப்படையின்
ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூரைச் சார்ந்த நத்தத்தனார். இந்நூல்
269 அடிகளை உடையது. சிறிய யாழை வாசிப்போர் சிறுபாணர் என்றும் சீறியாழ் எனும் யாழினை வாசிப்போர் சிறுபாணர் என்ற குறிப்பும் உள்ளது. சிறுபாணரை ஆற்றுப்படுத்துவது சிறுபாணாற்றுப்
படை ஆகும். ஆற்றுப்படை நூல்களில் அடி அளவில் குறைந்த நூலாணகும். ஈந்நூலில் சேர, சோழ, பாண்டிய நாடு ஆகியவற்றின் பெருமைகள் மற்றும் கடையெழு வள்ளல்களின் சிறப்புக்கள் நல்லியக்கோடனின் படைச்சிறப்பும் கொடைச்சிறப்பும் இந்நூலில் காணலாகும் செய்திகளாகும்
நெய்தல் நாட்டு வளம்
கடற்கரையில்
தாழை அன்னம் போன்ற மலரை வெளிப்படுத்தும். செறுத்தி பொன் போன்ற நிறமுடைய மலர்களைத் தோற்றுவிக்கும், முள்ளி நீலம் போன்ற மலரைத் தோற்றுவிக்கும். இத்தகு மலர்கள் நிறைந்த கடற்கரை ஊர்களையும் குளங்களையும் நெய்தற்பகுதிகளில்
காணலாம். அங்கு எயிற் பட்டிணம் என்றதொரு சிறு நகரம் உண்டு.
முல்லை
அவரை
பவளம் போல மலர்ந்திருக்கும். மயில்களின் கழுத்தைப் போன்ற நிறமுடைய காயா மலர்கள், காந்தல் கை விரல் போல
ப10த்திருக்கும். எங்கும் முல்லைக் கொடிகள் படர்ந்திருக்கும் வெடிப்பக்களில் குதிக்கும் நீரினையுடைய அருவிகளையுடைய மலையை உடையது. வேலூர் என்ற நகரத்தினை உடையது.
மருத நாட்டின் வளம்
கஞ்சி
மலர்கள் மிகுந்துள்ளது. மலர்கள் மாலைதொடுத்தாற்போல் மலர்ந்து காட்சியளிக்கும் அவற்றின் கிளைகளில் சிச்சிலிப் பறவை தங்கியிருக்கும். நீல மணி போன்ற நிறத்தினையுடைளது. அதன் வாய் பொன்னிறமாக இருக்கும். அப்பறவை நீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்;கும். அப்பறவையின் நகங்கால் தாமரையின் இலைகள் கிழிக்கப்படும். அவ்விழைகளுக்கு இடையே தாமரை மலரில் மலர்ந்துள்ள தேனை உண்ணுகிற கருநிற வண்டுகளின் வரிசையானது திங்களைச் சேர்கின்ற வரிசையில் திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பை ஒப்பத் தோன்றும். இத்தகு சிறப்புடைய மருதநில ஊர்களிலவ் ஒன்று ஆமூர்ஆகும்.
சேர நாட்டு இயற்கை வளம்
ஓர்
எருமை தன் காலடியில் சிக்கிய கொழுத்த மீன்கள் எல்லாம் நசுங்கும்படி வயலில் இறங்கி நடக்கிறது. முதலில் செங்காந்தல் மலர்களை மேய்ந்து பின் மிளகுக் கொடிகள் படர்ந்த ஒரு பலாமரத்தின் கொடியை அண்டுகிறது.புதிய தேன் கமலும் செங்கழுநீர்மலர்களையும் மேய்கிறது.காட்டுமல்லிகை நிறைந்த படுக்கையில் படுத்துக் கொள்கிறது.
பாண்டிய
நாட்டு இயற்கை வளம்
ஊப்பு
வணிகர் வலிமை பொருந்திய எருமைக் கடாக்கள் பொருத்திய வண்டியில் உப்பை ஏந்நிச் செல்கின்றனர். ஆவ்வண்டி செல்லும் சக்கரச் சுவட்டின் வழியேஅவர்கள் அன்போடு வளர்க்கும் குரங்குகளும் பின் தொடர்கின்றன. வணிகப்பெண்கள் தங்கள் மடிகளில் முத்துக்களை மறைத்து வைத்தனர். அவர்கள் தங்கிய இடங்களில் அப்பெண்களின் குழந்தைகளுடன் அக்குரங்குகள் விளையாடின. இவ்வர்ணணைகளின் வழி உப்பும், முத்தும் பாண்டிய நாட்டின் செல்வங்களாக இருந்தது வெளிப்படுகின்றது.
சோழ நாட்டு இயற்கை வளம்
நீர்வளம
நிறைந்த வயல்களில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. ஆவ்வயல்களில் அழகிய தும்பிகள் தங்கள் பெடைகளைத் தழுவிய வண்ணம் சிறகுகளை அடித்துக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணைப் பாடுகின்றன இத்தகைய இயற்கை வளங்கள் நிறைந்த சோழ நாடு என சோழ நாட்டின்
இயற்கை வளங்களைச் சித்திரிக்கின்றார் ஆசிரியர்.
ஓய்மா நாட்டின் இயற்கை வளம்
& யாழ் வர்ணணை
குரங்கு
பாம்பின் தலையைப் பிடித்தால் அது எப்படி இறுகுமோ அப்படி ஒரு சமயம் இறுகியும் ஒருசமயம் நெகிழ்ந்தும் கையைச் சுற்றுமோ அப்படி
யாழ்த்தண்டில் நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் சுற்றின் நரம்பு துவக்கும் வார்கட்டு மணிகளை நிரலாக வைத்ததைப் போல இரண்டு விளிம்பையும் சேர்த்துத் தைத்ததைப் போல முடுக்கின. ஆணிகள் பொருந்தச் செய்து, வயிறு சேர்த்து ஒட்டச் செய்த பத்தர் , குமிழம் பழத்தின் நிறம் அமைந்த பேர்வை அமிழ்தத்தைத் தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் நரம்புகளால் ஆகிய சீறியாழ் என்று இசையின் இனிமையை அமிழ்தத்திற்கு இணையாக ஒப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக