இயற்கைக்குத் திரும்புவோம்

 முனைவர் ப.செல்வி,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை - 641044

இயற்கைக்குத் திரும்புவோம்

 

இயற்கைக்குத் திரும்புவோம் செய்யுளின் ஆசிரியர்  கவிஞர் தேவயானி அவர்கள் 05.05. 1955ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள அனுராதபுரம் எனும் ஊரில் தாசிரி வேளாளர்,   கருப்பாத்தாள் ஆகியோருக்கு மகளப் பிறந்தார்இவருடைய இயற்பெயர் தெய்வானை பள்ளிக்கல்வியை இலங்கையில் உள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் பயின்றார் முதுகலை வகுப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்தற்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எனும் ஊரில் வசித்து வருகிறார்படிக்கும் காலத்திலேயே பேச்சுகட்டுரைகவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றவர்அகில இலங்கை இந்து மகா சபை நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றுத் தாம் படிக்கும் பாடசாலைக்குப் பெருமை சேர்த்தவர்தீக்கதிர்குங்குமம் ஆகிய இதழ்களில் பல்வேறு கவிதைகளை வெளியிட்டுள்ளார் தற்போது இவர் அஞ்சல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் இவர் எழுதிய உயிருக்குள் தாகம் எனும் கவிதை நூல் உடுமலைப்பேட்டை அரசுக் கல்லூரியில் முதுகலை மாணவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சிறப்பிற்குரியதுஇவருடைய உயிருக்குள் தாகம் என்னும் நூலிலுள்ள இயற்கைக்குத் திரும்புவோம் எனும் கவிதை இங்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது

 

 கவிதையின் பாடுபொருள் இயற்கைக்கு நாம் திரும்ப வேண்டும் என்பதே

 விஞ்ஞானிகளே விடை கூறுங்கள் ஆய்வு செய்கின்ற விஞ்ஞானிகளை என் கேள்விக்கு விடை கூறுங்கள் என்று ஆசிரியர் கேட்கின்றார். உலகை வென்றுவிட்டதாய்ப் பேருவகை கொள்ளாதீர் விஞ்ஞானிகளே நீங்கள் உலகை வென்று விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடையாதீர்கள்சாபக் கற்களில் தான் சந்தனம் அரைத்து பூசிக் கொள்கிறீர்நிறைய மக்களுடைய சாபத்தால் தான் நீங்கள் சந்தனத்தை அரைத்து பூசிக் கொள்கிறார்கள் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் ஏனென்றால் என்னைத் தட்டி எழுப்பும் சூரிய கிரகணத்தில் புற்றுநோய். என் மீது தவழும் சந்திர ஒளியில் சர்க்கரை வியாதிஇங்கு சுவாசப்பை கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறதுஅதாவது சுவாசிப்பதற்கான காற்று நமக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்காடுகளை அழிப்பதால் மரங்களிலிருந்து வெளியிடப்படும் காற்று நமக்குக் கிடைப்பதில்லைஅதற்கு பதிலாக வாகனங்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடு தான் நமக்குக் கிடைக்கின்றதுஅமுதம் பொழிந்த ஆகாயத்தை அமிலம் பொழியச் செய்துவிட்டீர் கவிதை பாடிய காற்றைக் தண்டித்து கருப்பு முக்காடிட்டீர். பூமிப் பெண்ணின் ஓசோன் திரையை ஓட்டை போட்டுவிட்டோம்கல்லுக்குள் மறைந்திருந்த தீயை நெஞ்சுக்குள் நெருப்பு மூட்டினீர். நன்சை விளைநிலங்களுக்கு செயற்கை உரத்தை இடுவதால் நஞ்சாகிறதுஎன்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்பானங்களில் எலும்புகளை உருக்கும் ரசாயனம் சேர்த்து நம் உடலைப் பாதிப்படையச்செய்கிறோம்என் தாய்ப்பால் கசந்து போனதுஇப்போது நோயைவிட மருந்து தான் நமக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறதுஅந்த மருந்தினால் நம் உடலில் உள்ள பாகங்கள் பழுதடைகின்றனமரங்களுக்குப் பதில் மருத்துவமனைகள் தான் உயரமாக வளர்கின்றனமரங்களை நட்டு வளர்த்தால் நல்ல காற்று நமக்கு கிடைக்கும் மரங்களை அழிப்பதால் நாம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு நாம் மருத்துவமனைக்குச் சென்று மிகுந்த பொருட் களை இழந்து துன்பப்பட நேரிடுகின்றதுநான்கடி கடப்பதற்குள் நாக்குக் காய்கிறது கால்கள் தேய்கிறதுஅன்று இளவட்டக்கல் தூக்கிப் பலம் கட்டிய இளைஞர்களை நான் எண்ணிப் பார்க்கின்றேன்அந்த இயற்கை உணவுக்காக ஏங்குகின்றேன்என்று கவிஞர் இன்றையநிலையில் நாம் இயற்கையைப்பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்