இலக்கியத்தில் பெண்கள்
முனைவர் ப.செல்வி,
இலக்கியத்தில் பெண்கள்
இலக்கியத்தில் பெண்கள் ஆசிரியர் கவிஞர் செல்வகுமாரி புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் தற்போது புதுவையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமூக உணர்வுடன் சமூகப் பணிகள் பல செய்து வருபவர். மார்க்சியம் மற்றும் முற்போக்குச் சிந்தனை உடையவர் படிக்கும் காலத்தில் இருந்தே பெண்களின் சிந்தனையில் அதிகம் ஈடுபாடு உள்ளவர். மதுரையில் நடைபெற்ற மாணவர்கள் மாநாட்டில் முதல் பத்து சிறந்த கவிஞர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். இவரது பெண்ணியம் பேசுகிறேன் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து இலக்கியத்தில் பெண்கள் இக்கவிதை இங்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது
செய்யுளின் பாடுபொருள் பெண்ணியத்தை மையமாகக் கொண்டது. பெண்மைக்கு மென்மை பூசி பேரிலக்கியம் படைத்திட்டனர். பெண்கள் மென்மையானவர்கள் என்ற கருத்திலேயே இலக்கியவாதிகள் இலக்கியங்கள் படைத்துள்ளார்கள். பெண்மையை ரணமாக்கிப் புராணங்கள் படைத்திட்டனர். பெண்களுக்குத் துன்பம் தருகின்ற வகையில் பல இலக்கியங்கள் தோன்றியுள்ளது.பெண்மையைப் பேயென்றும் இதிகாசங்கள் படைத்தனர். சங்க இலக்கியங்களிலும் தங்கக்காப்பியங்களிலும் பெண்கள் பேசப்படும் விதமே தனிதான். ஐந்திணைகள் பிரித்தனர். அகப்பொருள் கண்டனர். முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்று அகத்திலே முப்பொருள் கண்டனர். முதற்பொருளை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று நானிலமாய் ஆக்கினர். அவற்றினுடைய முல்லை குறிஞ்சி மருதம் என்றும் நெய்தல் என்றும் நானிலம் ஆக்கினர். இந்த நான்கு நிலத்திற்கும் அந்நான்கு தெய்வங்களாய் ஆண்களே உருப்பெற்றனர். குறிஞ்சிக்கோர் முருகன். முல்லைக்கோர் திருமால் மருதத்திற்கு இந்திரனையும் நெய்தலுக்கு வருணன் என்று நான்கு நிலத்தை ஆண்டனர். குறிஞ்சியும் முல்லையும் திரிந்த பாலை ஒன்று நீர் இழுந்து நிறமிழந்து பசுமை இழந்து பல இழந்து கோடை வெப்பத்தால் கொதிந்துப் போன நிலம் பாலையாம். பாலைக்கோர் தெய்வமாய்க் கொற்றவையை ஆக்கினார்.பிணம் தின்னும் பெண்ணாக உருவகப்படுத்தினர். அந்தோ! என்ன கொடுமை வளமார்ந்த இடத்திற்குச் சொந்தமானவர்கள் ஆண் தெய்வங்கள் வளமிழந்த இடத்திற்குச் சொந்தமானவள் பெண்தெய்வம். என்ன பாகுபாடு இது என்று கவிஞர் பெண்ணிய நேக்கில் வினவுகிறார். அதுமட்டுமா கருப்பொருள் அடுத்த உரிப்பொருள் உள்ளே பெண்ணின் துயரத்தைப் பெருமையாய்க் காட்டினர். பிரிந்த காதலனை எண்ணி ப்பிரிவாற்றாது துயருற்றாள் பெண். அது பிரிதல் பிரிதல் - பிரிதல் நிமித்தமும் என்று குறிப்பிடுகின்றார்கள். பொருள் தேடச் சென்ற கணவனுக்காகப் பசலை நோயால் மெலிந்தாள். அது இருத்தல் இருத்தல் இருத்தல் நிமித்தம் என்றனர். கடலில் சென்றவனுக்குக் கண் விழித்துக் காத்து நின்றாள். அது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்றனர். இப்படி எத்தனை எத்தனை நிமித்தங்களைப் பெண்மகள் சுமந்தாலோ. இலக்கியப் பெண்கள் மட்டும் உயிர்பெற்று வாழ்ந்திருந்தால் காவியமும் காப்பியமும் இலக்கியமும் இதிகாசமும் கதை மாறிப்போயிருக்கும். ஆம் கண்ணகி விழித்திருந்தால் கோவலனைச் சுட்டிருப்பாள். மாதவி மயங்காதிருந்தால் மணிமேகலையை மாய்திருப்பாள். குந்தியவள் நினைத்திருந்தால் கர்ணனையே கலைத்திருப்பாள். சீதையவள் கொதித்தெழுந்தால் இராமனையே எரித்திருப்பாள். சந்திரமதி வெகுண்டிருந்தால் அரிச்சந்திரனைப் புதைத்திருப்பாள். ஆண் வார்த்த இலக்கியங்கள் ஆணாதிக்க வெளிப்பாடுகளே. ஆண் வார்த்த காப்பியங்கள் பெண்ணுக்கிழைத்த கொடுமைகளே . இப்படி ஒவ்வொரு இலக்கியங்களையும் இலக்கியங்களின் வழியும் ஆணாதிக்கத்தை வெளிப்படுதியும் பெண்மையை இழிவுபடுத்தியதையும் காணமுடிகிறது என்று கவிஞர் பெண்ணியத்தை இக்கவிதையின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.
என்னைப் பற்றி எழுதியதற்கு நன்றிமா..இன்னும் நிறைய இருக்கு, இதுவே நிறைவு.
பதிலளிநீக்குதங்களின் கருத்தைத் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்கு