இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தர் பாடல்கள் - சிவவாக்கியர் பாடல்கள்

முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044 சித்தர் பாடல்கள்   சிவவாக்கியர் பாடல்கள்   ஓடி ஓடி உட்கலந்த ஜோதி வடிவை நாம் நாடிநாடி நம்முடைய நாட்கள் கழிந்து போகின்றன .வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் இப்படி இறையைத் தேடியே மாண்ட மனிதர்கள் பலர் கோடிகோடி எண்ணிறந்த கோடியே.இறைவன் நம் மனத்துள்ளே  இருக்கின்றார் என்பதை உணராமல் நாம் ஓடி ஓடி நம்முடைய வாழ்க்கையைக் கழிக்கின்றோம்.  மாறுபட்டு இருந்து மாறுபட்டு மணிகளை நன்கு விளக்கி வண்டுகள் சேகரித்த தேனைக்  கொண்டு போய் ஒரு  கல்லின் மீது ஊற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் கூறுபோட்டு தீர்க்கவும் குருக்கள் பாதத்தில் வைக்கின்றேன். மனிதர்கள் மூடநம்பிக்கையால் கல்லின் மீது பாலையும் தேனையும் ஊற்றி வீணாக்குகின்றனர்.  எத்தனையோ குழந்தைகள் பசிக்கு அழுது  துன்பப் படுகின்ற நிலையை நாம் இன்னும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். கோயில் இது குறித்து கோயிலும் குளங்களும் கும்பிட...

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் பாடல்

முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044 சித்தர் பாடல்கள்   பட்டினத்தார் பாடல்  ஒன்று என்று இரு அனைவரும் ஒன்று என்று இரு தெய்வம் உண்டு. என்று இரு உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு உயர்ந்த செல்வம் எல்லாம் அப்பொழுது தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். பசித்தோர் முகம் பார்த்து நல்ல அறங்களைச் செய்து நட்போடு நன்றியோடு நடுநிலையில் இருந்து நீங்காமலே நமக்கு இட்டபடி நாம் நடக்க வேண்டும் மனமே. உனக்கு உபதேசம் இதுவே என்று மனதிற்கு உபதேசம் செய்கின்றார் பட்டினத்தடிகள்.  நம்பி விருப்பத்துடன் இரு வாழ்க்கை பொம்மலாட்டம் . என்று இரு இந்த வாழ்க்கை பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டம் என்றே கருது . சுற்றத்தார் ஆகிய உறவினரை வாழவைக்கும் குடிக்கின்ற நீரோட்டம் என்றே இரு நெஞ்சே உனக்கு உபதேசம் இது தான் என்று குறிப்பிடுகின்றார்.  பிறக்கும் பொழுது நாம் எதுவும் கொண்டு வந்ததில்லை. பிறந்து மண்மேல் வாழ்ந்து இறக்கும் பொழுது எதுவும் நாம் கொண்டு போவதில்லை இதற்கிடையே ...

சித்தர் பாடல்கள் - பாம்பாட்டி சித்தர்

    முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044 சித்தர் பாடல்கள் பாம்பாட்டி சித்தர்    நாடு நகர் வீடு மாடு முதலான பொருட்கள் எல்லாம் எமன் வரும் போது நம்முடன் கூட வருமா என்றால் வராது உடலிலிருந்து உயிர் போனபின் என்ன பயன் உண்டாகும் என்பதை உணர்ந்து நின்று ஆடு பாம்பே.  யானைப் படை சேனை படை தேர்ப்படை குதிரைப்படை இவையாவும் எமன் வரும் பொழுது நமக்கு துணை நிற்காது என்பதை உணராமல் ஞானம் சிறிதும் இல்லாத நாய்கட்கு புத்தி தேடி வரும்போது நீ நின்று ஆடு பாம்பே.  நீரில் தோன்றும் குமிழி ஆனது அப்போதே  நிலை இல்லாமல் போவதை போல் இந்த உடல் உயிர் போனபின் நிலை இல்லாமல் போய்விடுகிறது என்பது உறுதி. என்று உலகில் பல உயிர்களைப் படைத்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நீ நின்று ஆடு பாம்பே.  நாறுகின்ற மீனை பலதரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் தனது இயல்பான நாற்றம் போகாது அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு ...