சித்தர் பாடல்கள் - சிவவாக்கியர் பாடல்கள்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
சித்தர் பாடல்கள்
சிவவாக்கியர் பாடல்கள்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதி வடிவை நாம் நாடிநாடி நம்முடைய நாட்கள் கழிந்து போகின்றன .வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் இப்படி இறையைத் தேடியே மாண்ட மனிதர்கள் பலர் கோடிகோடி எண்ணிறந்த கோடியே.இறைவன் நம் மனத்துள்ளே இருக்கின்றார் என்பதை உணராமல் நாம் ஓடி ஓடி நம்முடைய வாழ்க்கையைக் கழிக்கின்றோம்.
மாறுபட்டு இருந்து மாறுபட்டு மணிகளை நன்கு விளக்கி வண்டுகள் சேகரித்த தேனைக் கொண்டு போய் ஒரு கல்லின் மீது ஊற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் கூறுபோட்டு தீர்க்கவும் குருக்கள் பாதத்தில் வைக்கின்றேன். மனிதர்கள் மூடநம்பிக்கையால் கல்லின் மீது பாலையும் தேனையும் ஊற்றி வீணாக்குகின்றனர். எத்தனையோ குழந்தைகள் பசிக்கு அழுது துன்பப் படுகின்ற நிலையை நாம் இன்னும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
கோயில் இது குறித்து கோயிலும் குளங்களும் கும்பிடும் நாம் குலத்துப் பெண்கள். கோயிலும் நம்முடைய மனத்துள்ளே குளங்களும் நம்முடைய மனதிலே. ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே அதனால் எதுவும் ஆவதும் இல்லை அழிவதுமில்லை கோயில் குளம் எல்லாம் நம்முடைய மனத்திலேயே இருக்கின்றது. மனமே கோவில்.
சாதி என்பது எது சலம் திரண்ட நீரெல்லாம் பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்து காதில் வலி காற்று காரை கம்பி பாடகம் பொன் ஒன்றல்லோ சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ ஏனாம் ஜாதியின் பெயரால் ஓதிக் கொண்டிருக்கிறோம்.என்று சாதி பேதம் பார்க்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கின்றார். அது மட்டுமல்ல, மணமுடிக்க மணப் பெண்ணை குணம் பார்த்துதான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர குலம் பார்த்தல்ல என்று இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறார்.
பாலானது கறந்தபின் பசுவின் காம்பில் உட்புகாது. கடைந்த வெண்ணெய் ஆனது மோரிலே சென்று கலக்காது. உடைந்துபோன உயிர் உயிரின் சங்கொலியன் ஓசை உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடலைச் சென்று சேராது. விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் மரத்தில் சென்று மலராது. இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே என்று நிலையாமையை உணர்த்துகின்றார் சிவவாக்கியார்..
கருத்துகள்
கருத்துரையிடுக