சித்தர் பாடல்கள் - பாம்பாட்டி சித்தர்

  முனைவர் .செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை – 641044



சித்தர் பாடல்கள்



பாம்பாட்டி சித்தர் 


  நாடு நகர் வீடு மாடு முதலான பொருட்கள் எல்லாம் எமன் வரும் போது நம்முடன் கூட வருமா என்றால் வராது உடலிலிருந்து உயிர் போனபின் என்ன பயன் உண்டாகும் என்பதை உணர்ந்து நின்று ஆடு பாம்பே.


 யானைப் படை சேனை படை தேர்ப்படை குதிரைப்படை இவையாவும் எமன் வரும் பொழுது நமக்கு துணை நிற்காது என்பதை உணராமல் ஞானம் சிறிதும் இல்லாத நாய்கட்கு புத்தி தேடி வரும்போது நீ நின்று ஆடு பாம்பே.




 நீரில் தோன்றும் குமிழி ஆனது அப்போதே  நிலை இல்லாமல் போவதை போல் இந்த உடல் உயிர் போனபின் நிலை இல்லாமல் போய்விடுகிறது என்பது உறுதி. என்று உலகில் பல உயிர்களைப் படைத்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நீ நின்று ஆடு பாம்பே.



 நாறுகின்ற மீனை பலதரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் தனது இயல்பான நாற்றம் போகாது அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு நீங்காது. என்று நின்று ஆடு பாம்பே .எனவே மனிதர்கள் பாவங்கள் செய்யாது இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது இப்பாடல்.



 காடு, மலை, நதி, பதி, காசி முதலான இடங்களுக்குச் சென்று கால்கடுக்க ஓடி நற்பலன் காணமுடியுமா என்றால் முடியாது வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளைக் கண்டு அதன் வேதக் கருத்துக்களின் முறையில் நெறி நின்று ஆடு பாம்பே. என்று மனிதர்கள் வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளை வலியுறுத்துகின்றார் பாம்பாட்டிசித்தர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்