சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் பாடல்

முனைவர் .செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை – 641044



சித்தர் பாடல்கள்

 

பட்டினத்தார் பாடல்


 ஒன்று என்று இரு அனைவரும் ஒன்று என்று இரு தெய்வம் உண்டு. என்று இரு உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு உயர்ந்த செல்வம் எல்லாம் அப்பொழுது தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். பசித்தோர் முகம் பார்த்து நல்ல அறங்களைச் செய்து நட்போடு நன்றியோடு நடுநிலையில் இருந்து நீங்காமலே நமக்கு இட்டபடி நாம் நடக்க வேண்டும் மனமே. உனக்கு உபதேசம் இதுவே என்று மனதிற்கு உபதேசம் செய்கின்றார் பட்டினத்தடிகள்.



 நம்பி விருப்பத்துடன் இரு வாழ்க்கை பொம்மலாட்டம் . என்று இரு இந்த வாழ்க்கை பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டம் என்றே கருது . சுற்றத்தார் ஆகிய உறவினரை வாழவைக்கும் குடிக்கின்ற நீரோட்டம் என்றே இரு நெஞ்சே உனக்கு உபதேசம் இது தான் என்று குறிப்பிடுகின்றார்.



 பிறக்கும் பொழுது நாம் எதுவும் கொண்டு வந்ததில்லை. பிறந்து மண்மேல் வாழ்ந்து இறக்கும் பொழுது எதுவும் நாம் கொண்டு போவதில்லை இதற்கிடையே ஆன நடுவில் உள்ள வாழ்க்கை வாழ்வதற்காகக் குறிக்கின்ற செல்வம் சிவன் தந்ததென்று இறைவனே நமக்கு வழங்கியது என்று கொடுக்க அறியாமல் யாருக்கும் கொடுத்த உதவாமல் இருக்கும்  மனிதர்களுக்கு நான் என்ன சொல்லுவேன் கச்சியேகாம்பரனே. என்று இறைவனைக்  கேட்கின்றார் பட்டினத்தடிகள் நாம் பிறக்கும் பொழுதும் எதுவும் கொண்டு வரவில்லை. இறக்கும் பொழுதும் எதுவும் கொண்டு செல்வதில்லை. இடையே உள்ள செல்வத்தை நாம் அறவழியில் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றார் பட்டினத்தடிகள்.


 நாம் உயிர் வாழ்கிறோம் .இருப்பது பொய் .போவது மெய். நாம் வாழ்வது சிறிது நாளில் நாம் இறப்பது என்பது உண்மை .என்று எண்ணி மனமே யாருக்கும் தீங்கினை நீ நினைக்காதே. பருத்த தொந்தி நமதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய் கழுகு தமது என்று தாம் இருக்கும். நம்முடைய உடலை இவை உண்டு வாழ்வதற்காக காத்திருக்கும். எனவே நாம் இருப்பது என்பது பொய் சிறிது காலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்வோம் பின்பு இறப்பது என்பது மெய் என்பதை உணர்ந்து மெய் அறிவோடு செயல்பட்டு நாம் அறவழியில் நடக்க வேண்டும்.


 உற்றார் உறவினர்கள் நாம் வீடு வரை மட்டுமே .விழியம் பொழுகும் மனைவி. மாதர் பெண்கள் வீதி மட்டுமே . விம்மிவிம்மி இரு கை தலை மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டுமே .பற்றி தொடரும் இருவினை நாம் செய்த நல்வினை தீவினை ஆகியவை மட்டுமே வரும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்