வருங்கால மனிதன் வருக

 

                      வருங்கால மனிதன் வருக

ஆசிரியர் தமிழ் ஒளி  இவருடைய இயற்பெயர் விஜயரங்கம் ஆகும். இவர் 21.09.1924 இல் சின்னையா செங்கேணி அம்மாள் இணையருக்குப் புதுவையில் பிறந்தார். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர் திராவிடர் கழகத் தொண்டனாக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டு வளர்த்தவர். இங்கு  வருங்கால மனிதனை வரவேற்கும் விதமாக அமைகிறது இவருடைய கவிதை.

 புத்தர் நடந்த திசையில் அவருடைய அருள் பொங்கி வழிந்த அந்த வழியிலே மனமகிழ்ந்து நடந்திட ஒரு தெய்வம் மனிதன் வருகின்றான். அவன் விண்ணில் பிறந்தவன் என்றிட முகம் வின் சுடராகப் பொலிவுற்று விளங்குகிறது. மண்ணில் பிறந்த மனிதர்கள் புது மைந்தனாகப் பிறந்து வருகிறான். மன்னன் அசோகனும், காந்தியும், திருவள்ளுவன் என்ற தாந்தியும் சொன்ன படிக்கு நடந்திட இந்தத் தூய பரிசுத்த மனிதன் வருகிறான். அவனுடய சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கும். அவன் சொல்லும் செயலுமே தொழிலாக உடையவன் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இல்லை என்கின்ற பழமையான நெறியைத் தொடர்ந்திட கல்லும் உருகும் கருணை படைத்த அவன் கொண்டு நடந்திட வருகின்றார். இந்த உலகத்தை வளர்த்து வாழ்ந்திடச் செய்ய வருகின்றார். இந்த மண்ணிலே அன்பென்ற விதையை விதைத்து அது நல்ல மரமாக வளர்ந்து கனிதரும். நாம் இந்த மண்ணில் எதை விதைக்கிறோமோ அதுவே நமக்குப் பலனாக கிடைக்கும். எனவே அன்பினை விதைத்து நல்ல மரமாகி கனி தருவதைப் போல நமக்கு நல்ல அன்பைத் தருகின்ற மனிதர்களை உருவாக்குகின்ற நல்ல மனிதன் வருகின்றார். பள்ளமும் மேடும்  குறுக்கிட்டால் அவன் அதை இசை பாடி கடந்து அந்த நிலத்தைக் கடந்து விடுவார்கள். கள்ளமும் வஞ்சமும் நிறைந்தவர்கள் அவர்களிடையே வந்தால் அவன் தன்னுடைய இரு கால்களால் எட்டி உதைத்திடுவான். நன்கு தெரிந்தவன் தமிழ் நாட்டை உயர்த்தும் மனிதனாகப் பொற்சுடர் போன்று பொலிவுற்று இந்த புண்ணிய மைந்தர் இந்த உலகத்திலே வருகின்றான் என்று கவிஞர் தமிழ்ஒளி அவர்கள் குறிப்பிடுகின்றார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்