ஓடு ஓடு சங்கிலி
சிற்பி
ஓடு ஓடு சங்கிலியின் ஆசிரியர் சிற்பி. இவர் ஆத்துப் பொள்ளாச்சியில் பொன்னுசாமி கண்டியம்மாள் ஆகியோருக்குப் புதல்வனாக 29.07.1936 இல் பிறந்தார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவரின் முதல் கவிதை நிலவுப்பூ 1959 இல் வெளிவந்தது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் முன்னோடி. இவருடைய கவிதை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், மௌன மயக்கங்கள், சூரிய நிழல், கண்ணாடி சிறகுள்ள ஒரு பறவை, உரைநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், வரலாற்று நூல்கள் எனப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டுள்ளார் இவருடைய ஒரு கிராமத்து நதி எனும் கவிதைத் தொகுப்பு 2002 இல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. இத்தொகுப்பிலுள்ள ஓடு ஓடு சங்கிலி எனும் கவிதை பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது. அம்மாவின் நினைவுகள் சோர்ந்து போகும்போதெல்லாம் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுவதைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. கவிதையின் மையப்பொருள் தன்னம்பிக்கையை ஊட்டுவது தாய்மையின் நினைவுகள்.
அழித்து எழுத முடியாத சித்திரம் ஒன்று உண்டு என்றால் அது அம்மா என்கின்றார் கவிஞர். எப்போதும் பெண்கள் எனில் ஆண்களுக்கு இளக்காரமாகவே உள்ளது என்கின்றார்.
காயம் பட்டால் கூட ரத்தம் வருவதில்லை மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று அம்மாவைப்பற்றி அங்கலாய்த்தார் அப்பா. .காணாது போன பேரன் திருமணம், கொள்ளுப்பேத்தி வரவையும் பிடிவாதமாய்ப் பார்த்து போனவள் அம்மா என்கின்றார் ஆசிரியர். கொங்குக் கொண்டை வெற்றிலைக் கறை படிந்த எந்துப்பல். சிவப்பு மேனி மறைக்கும் பின் கொசுவம் வைத்தத சேலை. அங்கிங்கெனாதபடி எங்கும் குத்தி வைத்துள்ள பச்சை என்று தன் தாயின் தோற்றத்தை வர்ணிக்கின்றார் கவிஞர். பட்டுப்புடவையில் அம்மாவைப் பார்த்ததே இல்லை. அப்பா எடுத்துக்கொடுக்க வில்லையோ என்னவோ என்று கவலைப் படுகிறார் கவிஞர். நேசிப்புக்கென்றே
எடுத்த ஜென்மம் என்று அம்மாவைக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அம்மா கடுமையான சைவக்காரி ஆனாலும் கை கூசாமல் தன்னுடைய தந்தைக்கு மாமிச உணவை சமைத்து அளிக்கும் தாய். வாசிப்பு நேசிப்பு கணவனைப் போலவே போலவே பண்ணையத்தையும் குழந்தைகளையும் குழந்தைகளைப் போலவே எருமைகளையும் உறவுகளைப் போலவே அக்கம்பக்கம் உள்ளவர்களையும் நேசித்தவர் என்றார் கவிஞர் .ஓலைக்குடிசை மாளிகை பேதங்கள் கைப் பக்குவத்தைக் கடுகளவும் மாற்றவில்லை அம்மாவினுடைய அந்தக்கூட்டாஞ்சாறு மிளகுரசத்திலும் அதே சுவை அதே மனம். இந்த உலகினிலே அதுபோல் இங்கு ஏது என்கின்றார் கவிஞர் தன்னுடைய தாயினுடைய கைப் பக்குவத்தை அவர்கள் சமைத்த உணவை இன்றும் கவிஞர் நினைத்துப் பார்க்கிறார். ஊரையே தூக்கும் அப்பாவின் கோபத்தை ஒற்றைப் பார்வையால் செதுக்கி உமையாக்கி விடுவாள். எழுபது வயதிலும் மூத்தவரை கண்டால் தலைகுனிந்து நிலத்தைப் பர்க்கும் மரியாதை. அம்மா ஓர் அதிசய பிறவி மட்டுமரியாதை கொட்டிய களஞ்சியமம் என்னுடைய தாய். கவிஞர் ஒற்றையடிப் பாதையில் நடக்க சலித்த குழந்தையை முன்னாள் நடத்தி ஓடு ஓடு ஓடு ஓடு காலை மிதிப்பேன் கையை மிதிப்பேன் ஓடு ஓடு என்று பாடினால் என் அன்னை. சோர்வுறும் போதெல்லாம் இன்றும் அம்மாவின் குரல் ஓடு ஓடு சங்கிலி ஓடு ஓடு என்று என்னைப்பார்த்து புத்துணர்வு தந்த அஎன்னுடைய தாயின்
நினைவுகள் இன்றும் சோர்வு ஏற்படும்போதெல்லாம் புத்துணர்வளிப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக