இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அகநானூறு: 4

  அகநானூறு: 4 களிற்றியானை நிரை முல்லை த் திணை ப் பாடல் - தோழி கூற்று தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. அவன் வரும் தேரிலுள்ள மணி ஒலிக்காமல் இருப்பதற்காக அதன் நாக்கை கட்டி வைத்துக்கொண்டு அவன் தேரில் வருகிறான். மணியின் ஒலி மலரில் தேன் உண்ணும் வண்டுகளைத் துன்புறுத்துமாம்.தலைவன் கருணை பூவுக்குள் உறங்கும் ஆண்-பெண் வண்டுகள் தேரின் மணியொலி கேட்டு அஞ்சாவண்ணம் தேர்மணியின் நாக்கைக் கட்டிவைத்துக்கொண்டுள்ள தேரில் அவன் (தலைவன்) வருகிறான், என்கிறாள் தோழி, தலைவியிடம். முல்லை அரும்பு விட்டிருக்கிறது. இல்லம், கொன்றை ஆகிய மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் கவின் (அழகு) பெற்றுத் திகழ்கிறது. அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர்...

குறுந்தொகை: 188

  குறுந்தொகை: 188 முல்லை த் திணை ப் பாடல் - தலைவி கூற்று மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார். தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.   தோழி! முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி மாலைக் காலம் வந்தது; என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.   கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்

குறுந்தொகை: 167

  குறுந்தொகை : 167 முல்லை த் திணை ப் பாடல் - செவிலித்தாய் கூற்று  கூடலூர் கிழார். தோழி! முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையை துவையாமல் உடுத்துக் கொண்டு குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.

குறுந்தொகை: 40

  குறுந்தொகை : 40 குறிஞ்சி த் திணை ப் பாடல் - தலைவன் கூற்று என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும் செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன. இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது .  

இனியவை நாற்பது

  இனியவை நாற்பது -  பூதஞ்சேந்தனார்    இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது.            நான்கு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று    மூன்று இன்பங்களை கூறியுள்ளார். பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது. ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது. மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது. பத்துப் ப...

இன்னா நாற்பது

  இன்னா நாற்பது - கபிலர்   வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம் . மழைத்துளி                      ஒழுகுதலையுடைய   பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம் . நீதி இல்லாமல் ஆளுகின்ற     அரசரது  ஆட்சி துன்பமாகும் . வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும் . அறத்தை                விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம் . வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம் . வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும் . கொடுமையுடையாரது வாய்சொல்லும் துன்பமாகும் . நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும் . பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும் . அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும் . அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும் . மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும் . அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும் . மழை பெய்யவில்லை என்றால் ஊ...

திருக்குறள் - ஆள்வினையுடைமை – திருவள்ளுவர்

                            பொருட்பால் அதிகாரம் -62 ஆள்வினையுடைமை – திருவள்ளுவர் முயற்சியின் முக்கியத்துவம் இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும் ; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும் . தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும் ; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும் . பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை , முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது . முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல் , பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும் . தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன் , தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான் . முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் ; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும் . ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள் ; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்ற...