குறுந்தொகை: 188

 

குறுந்தொகை: 188

முல்லைத்திணைப் பாடல் - தலைவி கூற்று

மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.

 

தோழி! முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி மாலைக் காலம் வந்தது; என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர். கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

இலக்கியத்தில் பெண்கள்

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை