குறுந்தொகை: 40
குறுந்தொகை: 40
குறிஞ்சித்திணைப் பாடல் - தலைவன் கூற்று
என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்?
என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும்
யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும் செம்மண்
நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல அன்புடைய
நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன. இனி
நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக