குறுந்தொகை: 167
குறுந்தொகை: 167
முல்லைத்திணைப் பாடல் - செவிலித்தாய் கூற்று
கூடலூர் கிழார்.
தோழி! முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற
மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையை துவையாமல் உடுத்துக் கொண்டு குவளை மலரைப் போன்ற
மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய
குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக