நாட்டுப்புறப் பாடல் - தொழிற் பாடல் - களையெடுப்புப் பாடல்

 தொழிற் பாடல்

உழவர் பாடல் - களையெடுத்தல் :

நச்சுப்புல் - களையெடுத்தல் -

பாடலின் வகை : தொழிற் பாடல் (நாட்டுப்புறப் பாடல்)

துறை / சூழல் : உழவர் பாடல் - வயலில் களையெடுத்தல்

மையக்கரு : பயிர் நன்றாக வளர்வதற்குத் தடையாகவும் நச்சாகவும் இருக்கும் தேவையில்லாத புற்கள் மற்றும் தாவரங்களைக் களையெடுத்தல்.

முக்கியக் கருத்து:

பயிர் செழித்து வளர வேண்டுமானால், வயலில் தேவையின்றி முளைத்திருக்கும் நச்சுப்புற்கள், அல்லி, தாமரை போன்ற தாவரங்களாகவே இருந்தாலும், அவற்றைப் பிடுங்கி எறிய வேண்டும்.

நீர் நிறைந்த நிலத்தின் அளவைப் பார்த்து களையறுக்க வேண்டும்.

குளத்திலும் சேற்றிலும் உள்ள தேவையில்லாதவற்றை கொத்தி எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.

நாற்றுகளுக்கு நடுவே முளைத்திருக்கும் நச்சுப் புற்களைக் கண்டறிந்து முழுமையாக அகற்றிப் பயிரைக் காக்க வேண்டும்.இதனையே ஆத்துக்குள்ளே ஏலேலோ அத்திமரம். அளவு பாத்து அறுக்கித்தள்ளு, குளத்துக்குள்ளே ஏலேலோ கொய்யா மரம்  ஏலேலோ  கொத்தித் தள்ளு ஏலேலோ, சேத்துக்குள்ளே சென்பகப் பூ ஏலேலோ  சென்பகப் பூ நாத்துக்குள்ளே ஏலேலோ நச்சுப் புல்லு ஏலேலோ நச்சுப் புல்லை அளவு பார்த்து நறுக்கித் தள்ளு என்று களைப்பைப் போக்கிக் கொள்ள பாடிக் கொண்டே நாட்டுப்புற மக்கள் பாடல் பாடித் தங்களின் களைப்பைப் போக்கிக் கொண்டு தங்களின் கடினமான வேலையைச் செய்யும் நிலை வெளிப்படுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

இலக்கியத்தில் பெண்கள்