பிம்பம் - கவிஞர் மஞ்சுளா

 2.பிம்பம் :

நூல் குறிப்பு

ஆசிரியர் : கவிஞர் மஞ்சுளா -  (மதுரையைச் சேர்ந்தவர்)

சிறப்பு : புதிய சிந்தனைகளும், நுட்பமான மொழி அம்சமுமாகும். இவர்தம் கவிதைகளின் முக்கிய அம்சங்களாகும்.

படைப்புகள் : கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இலக்கிய இதழ்களில் எழுதி வருகின்றார்.

கவிதை நூல்கள் (6):

 * இது தேநீர் காலம்.

 * தீமிதி

 * மொழியின் கதவு

 * இன்னுமொரு மழை

 * ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்.

 * வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை.

பாடம் அமைந்துள்ள நூல் :

"வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை" என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

கவிதையின் மையப்பொருள் :

ஒரு பெண்ணின் வெளிப்புறப் போராட்டங்களுக்கும் மனதிற்குள் நடக்கும் அகப் போராட்டங்களுக்கும் இடையிலான தளத்தைப் பேசுகிறது. பெண்ணின் சுயத்திற்கும், அவள் வாழும் சமூகம் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நிகழும் உளவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது.

பாடலின் விளக்கம் :

 * நமக்கு எதிரே வெளிப்படும் காட்சியானது வெறும் வெளிப்புறப் பொருள் அல்ல, அது நமது அகத்தில் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மாய வெளிச்சம் அல்லது உணர்வை உருவாக்குகிறது.

 * எதிரே தெரியும் காட்சி வழக்கமான பார்வைக்கு அப்பாற்பட்ட வேறொரு காட்சியாகத் தெரிகிறது. அதன் தன்மையில் இயற்கையின் அழகு மிளிர்கிறது. அதை உணர்ந்து பார்ப்பதே ஒரு நுட்பமான கலை.

 * தன் எதிரே தெரியும் காட்சி ஒரு காணொளி போல மனக்கண் முன் ஓடுகிறது. அதில் அலைவரிசைகள் மாறும்போது, இசையின் திசைகளும், அசலில் ஒலிக்காத ஒரு மௌனமான இசைக்கருவியின் ஓசையும் அகத்தில் கேட்கிறது.

 * எதிரே கேட்பதும் தெரிவதும் உயிருள்ள ஓசையாகும். ஓய்வில்லாமல் வீசும் காற்றில் நுட்பமான ஒளிகள் தெரிகின்றன.

 * எதிரே தெரியும் காட்சியில் கலையின் ரகசியமும் அடங்கியுள்ளது. அங்கே ஒரு புல்வெளி மிதப்பது போல உள்ளது; அதன் அசைவின் நுனியில் முழு நிலவு உயிர் பெற்று வெளிப்படுவது போல் தெரிகிறது.

 * இறுதியாக கவிஞர் கூறுகிறார் - எதிரே தெரிவது வேறெதுவும் இல்லை. ஒரு கலைஞன் இசைக்கும் இசையைப் போல தோன்றி மறையும் ஒரு பிம்பம்.

பெண்கள் தான் நினைத்த வாழ்வை அல்லது இலட்சியத்தை அடைய முடியாமல் ஆண்களின் கைப்பாவையாக வாழ நேரிடும் அவல நிலையை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

இலக்கியத்தில் பெண்கள்