புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!
புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர் ! பாடியவர் : கபிலர் . பாடப்பட்டோன் : வேள் பாரி . திணை : நொச்சி . துறை : மகண் மறுத்தல் . பாரியின் பறம்புநாடு இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளது . மூன்று வேந்தர்களும் இதனை முற்றுகை இட்டிருக்கிறீர்கள் . உங்கள் முற்றுகை அதனை ஒன்றும் செய்ய இயலாது . காரணம் உழவர் விளைவித்துத் தராத நான்கு வகை யான வளங்கள் இதன்கண் உள்ளன . ஒன்று , மூங்கில் நெல் விளைகிறது . இரண்டு , பலாப்பழம் உண்டு . மூன்று , வள்ளிக்கிழங்கு உண்டு . நான்கு , ஓ ரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள் உண்டு . வான் போன்று பரந்த இடத்தைக் கொண்டது அவன் மலை . வானத்து மீன்கள் போல் அதில் சுனைகளும் உண்டு . இப்படிப்பட்ட அவன் மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர் யானைகளைக் கட்டிவைத்தாலும் , இடமெல்லாம் தேரை நிறுத்திவைத்தாலும் , உங்கள் போர் முயற்சியால் அதனைக் கொள்ள முடியாது . வாள் வீசிப் போரிட்டாலும் அவன் தரமாட்டான் . அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு உரிய வழி ஒன்று உண்டு . அதனை நான் அறிவேன் . யாழ் ...