காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 


 முனைவர் ப.செல்வி,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044

காலம் பிரசவித்த மற்றொரு காலம்



காலம் பிரசவித்த மற்றொரு காலம் -  ஆசிரியர் பச்சியப்பன் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய அய்ய எகம்பாளையம் என்ற கிராமத்தில் ராஜவேல் மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 25. 6. 1968 இல் பிறந்தார் இவர் சென்னையில் அரசு கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குபவர் . உனக்கு பிறகான நாட்களில் கல்லால மரம் மழை பூத்த முந்தானை வேட்கையில் எரியும் பெருங்காடு ஆகிய கவிதை நூல்களும் பாரதியின் புதுவை வாழ்க்கை,  தும்பிகள் மரணமுறும் காலம்,  மண்ணில் எங்கும் நீரோடும் என்ற கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.  அழிந்து வரும் நம் வேளாண் பண்பாடும் நகரமயமாதல்போன்றவற்றால் ஏற்படும் வலியையும் பதிவு செய்கிறது இக்கவிதை.


 இந்த கவிதையின் பாடுபொருள்

அழிந்து வரும் வேளாண்மை மற்றும் நகரமயமாதலால்  ஏற்படும் தீர்க்க முடியாத வலியையும் வேதனையும் வெளிப்படுத்துவதாக உள்ளதே இந்த கவிதையின் பாடுபொருள் 



 குரோட்டன்ஸ் படர்ந்து கிடக்கும் இந்த இடத்தில்தான் என் வயல்  இருந்ததுவயல் இருந்த இடத்தில் மாடி வீடு கட்டி அந்த மாடி வீட்டில் குரோட்டன்ஸ்   செடிகள் வைத்துள்ளனர் விளைநிலங்கள் எல்லாம் வீடு கட்டும் நிலை ஏற்படுகின்ற அவலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  மூடியிருக்கும் இந்தக் கழிவுநீர்த் தொட்டி நேற்றுவரை ஜீவரசம் சுரந்த கிணறாக இருந்தது உயரத்தில் கண்ணாடிச் சில்லுகள் பதித்த சுற்று சுவர் ஓரம் தான் சுற்றுசுவரின்  கிணற்று  மேட்டின் வலதுபுறம் மாமரம்  இடதுபுறம் அரச மரம் இருந்ததுமரத்தில் உள்ள கனிகளை உன்ன வரும்   காலங்களில் பறவைகளின் பாடல்கள் எந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் ஒருநாளும் கேட்டதில்லைஅந்தக் கனிகள் நிறைந்த அந்த மரங்களில் காதுகளுக்கு இனிமை தருகின்ற பறவைகளுடைய ஓசை இனிய ஓசை எங்கும் கேட்டறியாத பாடல்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார் தாய்மையின் உணர்வு என்பதை அறியாத நகரம் போன்ற வாழ்க்கை நிலை .கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில் உள்ள நெல் மற்றும் கம்பு போன்றவற்றின்   பூக்களின் நறுமணம் பூசிய காற்று இன்று இல்லாமல் தொலைதூரம் போய் மின்விசிறியின் காற்றுத்தான் கிடைக்கிறதுமுடி அடர்ந்த அல்சேசன் நாயைக் கட்டி வைத்திருக்கிறாயே இங்குதான் உழவு மாடுகளைக்  கட்டி வைத்து இருந்தேன் அதற்கு வீசப்படும் கறி அந்த உழவு மாட்டின் கறியாகக்வகூட இருக்கலாம் என்று ஆசிரியர் தன்னுடைய மன வேதனையை இந்த கவிதையின் வழி வெளிப்படுத்தியுள்ளார். 


 



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்