ஆறு - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ஆறு ஆசிரியர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆசிரியர்குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் , 27 சூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர் . பக்திப் பாடல்கள் , இலக்கியம் பற்றிய பாடல்கள் , வரலாற்று நோக்குடைய கவிதைகள் , குழந்தைப் பாடல்கள் , இயற்கைப் பாட்டுகள் , வாழ்வியல் போராட்ட கவிதைகள் , சமூகப் பாட்டுகள் , தேசியப் பாட்டுகள் , வாழ்த்துப் பாக்கள் , கையறு நிலைக் கவிதைகள் , பல்சுவைப் பாக்கள் என பல்வேறு படைப்புக்களைப் படைத்துள்ளார். . சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார் . இரண்டு பெண்களுக்குப்பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை . ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார் . எம் . ஏ . படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து , தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார் . நாகர்கோவிலிலுள்...