ஒத்தைப் பனையில் காளியம்மாளின் பாத்திரப்படைப்பு
ஒத்தைப் பனையில் காளியம்மாளின் பாத்திரப்படைப்பு
ஒத்தைப்பனை கொங்கு வட்டாரமான கோவை மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதிய கதை.
காளியம்மாள் என்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் இப்புதினத்தில் பல்வேறு விவசாயக் குடும்பங்களின் துயர நிலையைப் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்
.
காளியம்மாளின் கணவர் முருகையா அவர்களின் பிள்ளைகள் செல்லமும் சுப்புவும்.செல்லத்திற்கும் சுப்புவிற்கும் சிறு வயதாக இருக்கும் பொழுது அன்பாகவும் அரவணைப்பாகவும் இந்த முருகையா காலம் மாற மாற எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தார்.
மேலும் அவர் சீட்டாடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வேலையும் செய்யாமல் சீட்டாடுவதற்கு மட்டும் பணத்தைப் பெற்றுக் கொண்டு குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்தார்.
இதனால் காளியம்மாள் தனி ஒருவராக நின்று செல்லத்தையும் சுப்புவையும் வளர்த்தார்.
மேலும் தன் மகனாக இல்லாவிடிலும் சின்னையனிடத்தும் பேரன்பு கொண்டு அவனின் இன்ப துன்பங்களில் பெரும் பங்கு வகித்தார்.
சின்னையன் தன் பெரியப்பா இடத்தில் சண்டை போட்ட போதும் அவனிடத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்த காளியம்மாள் சீமை மாட்டை விற்று அவனுக்குப் பணம் கொடுத்தார்.
இதன்பின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதையெல்லாம் மன உறுதியோடு சமாளித்தார்.
ஆனால் முருகையா சாராயம் குடிப்பதை அறிந்த காளியம்மாள் மனமுடைந்து போனார் .
இந்நிகழ்வினால் முருகையா சிறைக்குச் சென்ற பின்னும் கணவனிடத்தில் கொண்ட அன்பு அவரை வாட்டியது.
மங்களத்திடமும் அன்போடு இருந்தார் காளியம்மாள்.
காளியம்மாளின் மனநிலையை உணர்த்தும் படி ஆசிரியர் எழுதிய ஓர் வரி:
"சீட்டு ஆடின காலத்திலே அவர் தோட்டத்திலேயே ஒரு மூலையில் சும்மா படுத்திருக்கக்கூடாதான்னு நினைச்சேன்… இப்ப ஊரை விட்டே போயிட்டாரு. சீட்டாடிட்டே ஊரிலேயே இருக்கக்கூடாதான்னு நெனைக்கிறேன்… சத்தியமா அப்படித்தான் நெனைக்கிறேன்…. எங்கே எந்த கோலத்தில் இருக்கிறாரோ!" என்றபோது அவள் ஓ… வென கதறி விட்டாள்.
இவ்வாறு பல்வேறு வலிகளைத் தாண்டி குடும்பம் உடையாமல் அதனைக் காத்து வந்தார் காளியம்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக