ஒத்தைப்பனை திறனாய்வு
ஒத்தைப்பனை திறனாய்வு
முன்னுரை
ஒத்தைப்பனை என்ற இப்புதினம் பழமன் அவர்களால் எழுதப்பட்டது. இப்புதினம் கொங்கு வட்டாரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. காலமெனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் கரைந்து போகாமல் இருக்கும் மண் மணம் மாறாத மாந்தர்கள் இந்த புதினம் முழுக்கவும் நிரவி நிற்கிறார்கள்.அந்த மண்ணின் முகவரிகளை அவர்களின் துயரங்களைப் பற்றி எழுதப்பட்டது இப்புதினம்.
ஒத்தைப்பனை திறனாய்வு:
பல்வேறு நாவல்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதப்படும் இக்காலத்தில் ஒத்தைப்பனை படிக்கவிறுவிறுப்பும், சுவாரஸ்யமும் அமைவது மட்டுமே அவசியம் என்ற கருத்திற்கு சான்றாக அமைந்துள்ளது .சமூகத்தின் நிலையை உணர்த்தும் இந் நாவல் வாசகர்களை பல்வேறு பார்வையில் சிந்திக்க வைக்கின்றது. தொடக்கத்தில் மங்களத்தைப் பற்றி கூறுவது போல் இருந்தாலும், காளியம்மாவையும் அவரின் மகள் செல்லத்தையும் தான் நாவலின் தலைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி அமைந்துள்ளது.
மங்களம் தாயில்லாமல் வளர்ந்தாலும் அவளுக்குத் தந்தை என்ற ஒருவர் அன்போடு பார்த்துக் கொள்ள இருந்தார். ஆனால் காளியம்மாவிற்ககோ கணவன் இருந்தும் இல்லாத நிலைதான் ,செல்லத்திற்கும் தந்தை இருந்தும் இல்லாத நிலை தான். காளியம்மாளின் நிலையை ஒவ்வொரு நிகழ்வின் மூலம் படிக்கும் பொழுது அவர் தனி ஒருவராக இருந்து செல்லத்தையும் சுப்புவையும் வளர்க்கப்படும் பாட்டை அறிய முடிகிறது. ஆனாலும் அவர் கணவனின் இடத்தில் இறுதி வரையில் அன்பு வைத்திருந்தார். செல்லம் அதற்கும் மேல் தந்தையைப் பற்றி முழுதாகத் தெரிந்தாலும் தந்தையின் மேல் பேரன்பு கொண்டிருந்தாள். எஸ்எஸ்எல்சி முடித்த பின்பு மேற்படிப்பிற்கு அனுப்பாததால் வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் தாயிக்கும் தம்பிக்கும் உதவியாக இருந்த செல்லத்தைத் தான் ஒத்தைப்பனையாக கருதக்தோன்றுகிறது. ஏனென்றால் நாவலின் முடிவில் காளியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள் அப்படி என்றால் சில காலத்தில் அவர் போன பின்பும் கூட ஒரு வேலை இல்லாமலும் திருமணம் ஆகாமலும் இருக்கும் செல்லம் தான் சுப்புவையும் பார்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும். சிறுவயதில் தந்தையின் அன்பு கிடைத்தாலும் தேவைப்படும் பொழுது அந்த அன்பு இல்லாமலும், மேற்படிப்புப் படிக்க முடியாமலும், தாய்க்கு உதவியாகவும், தம்பிக்கு அரவணைப்பாகவும், அண்ணன் மற்றும் அண்ணியின் இடத்தில் அன்பு கொண்டும், ஜின்னிங் பேக்டரிக்கு வேலைக்குச் செல்வதை குறைவாக எண்ணாமலும் மன உறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்ட செல்லத்தை தான் நான் ஒத்தைப்பனையாக கருத வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக