பழமொழி 400

 பழமொழி 400

முக்குற்றங்களையும் அருமையாகக் கெடுத்தலான்குற்றமின்றிமுற்ற அறிந்த கடவுளின் திருவடிகளையேஅகன்ற கடலால் சுற்றப்பட்ட அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில்உரிமைப் பொருளைப் போலக் கருதிஅறிந்தவர்களது உயர்வேபேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரியது.
பெரியதன் ஆவி பெரிதுஎன்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.
 கடவுளின் திருவடிகளைஉரிமையாக வணங்கினார்களது உயர்வே மிகச் சிறந்தது.
நற்குணம் உடைய பெண்ணே!, நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள்நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லைகனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும்இல்லை.)
கல்லாதான் கண்ட நுண்பொருள்விளங்குதல் இல்லை.
வினா முந்துறாத விடையில்லை,' 'கனா முந்துறாத வினையில்லை' - இவ்விரண்டும் இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள்.
எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே!, (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்உறவினரை இல்லார்க்குநகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போலநூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள்நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.
கற்றார்,கல்லார் அவையின்கண் சிறந்த பொருள்களைக் கூறாதிருக்கக்கடவர்.
  (காமவிருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதிஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே!, அறிஞர்தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடிதம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள், அவையின்கண்தோல்வியடைதற்குரியனவற்றைக் கொண்டு போகார்.
கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர்.
  நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே!, பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையனஅதுபோல்அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம், (அவர்கள் போன்றஅறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும்கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது.
கற்றோர் பெருமையைக்கற்றோர் அறிவார்.
'பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.
அறஞ் செய்கின்ற ஒருவன்இவ்வுலகின் திறத்து ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான்இவ்வுலகினின்றும் நீங்கிமறுமை யுலகத்தின்கண் சென்றானாயின்அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்), நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்குஇரண்டுலகினின்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும்.
இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால்அதனைநாள்தோறும் செய்க.
'வேள்வாய் கவட்டை நெறிஎன்பது பழமொழி.
உலகத்தினை அரசுசெய்த மாவலி,  தன்னோடு பொருந்தியிருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய்மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லிசெருக்கின்கண் மிக்குதானமாக நீர்வார்த்துக் கொடுத்துஉலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்), குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்குதாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல.
குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர்.
'ஆஅம் எனக்கெளி தென்றுலகம்ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்என்பது பழமொழி.
செந்நெறியில் நிற்பச்செய்தல்தெய்வமாந் தகுதியைப் போலாம்ஆதலான். மானை யொத்த பார்வையை உடையாய்!, தந்தை தன் குழந்தைகளைஎல்லாவற்றானும்செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவு கொளுத்துதல் வேண்டும்;  தன்னால் நிலைநிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும்
மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தை கடனாம்.                     
'அணங்காகும் தான் செய்த பாவை தனக்குஎன்பது பழமொழி.
அரிதாளை அரிந்து செப்பம் செய்து பொருந்துமாறு தலைக் கூட்டிய விடத்தும்அவர் எடுக்கும் பொழுதே பொருந்தாத மண்பின்னர்ப் பொருந்திச் சுவராக ஆதல் இல்லை, (ஆதலால்தீய செயல்களை உடையார்நம் பொருட்டு இவர் வருத்தமுற்றார் என்பதற்காக வசமாகப் பொருந்துதல் உண்டோ (இல்லை),  நெஞ்சே அவர்மேல் பூண்ட அன்பினை விட்டுத் திருந்துவாயாக.
கீழ்மக்களுக்கு நன்மை செய்யினும் அதைஉட்கொண்டு செய்தார் விருப்பம்போல் நடவார்.
'அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தா மண் ஆகா சுவர்என்பது பழமொழி.
தம்மிடத்தில் மிகுதியாக நட்புப் பூண்டவர்க்கும்அவரது பகைவர்க்கும்அவரிடத்திற் சென்று மனவேறுபாடு இன்றி மிகவும் நட்டார்போன்று நின்று அவர்களுள் ஒருவரோடு மனம் பொருந்த இருந்து உறுதியாயின செய்ய மனமியையாதார்இருகடையாலும் சுடுகின்றகட்டை என்று சொல்லப்படுவார்.
ஏற்பன கூறி இருவரது பகைமையைவளர்த்தல் அறிவிலாரது இயல்பு.
இரண்டு கடையாலும் சுடுகின்ற கொள்ளியை ஒப்பஇருதிறத்தார்கண்ணும் பகைமையைக் கொள்ளுத்துவரேயன்றிஒருதிறத்தார் மாட்டாவதுநின்று நன்மை செய்யார் அறிவிலார்.
'இருதலைக் கொள்ளிஎன்பது பழமொழி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்