காடு

 


ஆசிரியர் பழனிபாரதி.

மனிதன் மனிதத் தன்மையோடு உள்ளனாமனிதன் ஆறறிவு படைத்தவன் மிருகங்களிடம் உள்ள குணங்கள் மனிதர்களிடம் உள்ளனவா கவிதை எழுதக் காகிதம் எடுத்தார் காகிதத்தின் மணம் மூக்கைத் துளைத்தது எத்தனை மரங்கள் அளிக்கப்பட்டிருக்கும் கவிஞனின் மனம் காட்டுக்குள் அழைத்துச் சென்றது வார்த்தையாக வந்த மிருகம். இழுத்துச் சென்று காட்டுக்குள் அவர்களுடைய மனம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. கவிஞன் விலங்காகப் பிறக்க நினைத்தார் .நானும் ஒரு விலங்காக நினைத்தேன் கலந்தாலோசித்தேன் விலங்குகளுடன் புலியாக பிறக்கலாமா என்று நினைத்தேன் உனக்கு போராட தெரியுமா என்றது புலி. புலியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது .நாய் நன்றியோடு இருக்க தெரியுமா என்று கேட்டது கவரிமானிடம் சென்ற பொழுது தன்மானத்தோடு வாழத்தெரியுமா என்று கேட்டது அடுத்தவர் அழுக்கைச் சுமக்க முடியுமா உன் முதுகில் என்று கேட்டது கழுதை ஒட்டகமானது பாலைவனங்களை உன்னால் கடக்க முடியுமா அந்த வறண்ட நிலத்திலும் வாழ முடியுமா என்று கேட்டது ஒட்டகம் .பந்தயத்தில் வெற்றி பெற முடியுமா என்று கேட்டது குதிரை வைக்கோல் கன்றுக்கும் உன்னால் பால் சுரக்க முடியுமா என்றது பசு.ஆசீர்வதிக்கத் தெரியுமா என்று கேட்டது யானை இருட்டிலும் பார்க்கத்தெரியுமா என்று கேட்டது பூனை இறுதியாக ஆண் பெண் வேற்றுமை பார்க்காமல் குழந்தையை வளர்க்க தெரியுமா என்று கேட்டது கங்காரு நான் முடிவு செய்துவிட்டேன் விலங்காகப் பிறக்க வேண்டுமென்றால் மனிதர்களாகத் தான் பிரறக்க வேண்டும். ஐந்தறிவு உடைய விலங்குகள் ஆறறிவுடைய மனிதர்களைப் போல இருக்கின்றன . ஆறறிவுடைய மனிதர்கள் ஐந்தறிவுடைய விலங்குகளுக்கும் கீழாக இருக்கின்றார்கள். ஆனால் விலங்குகள் மனிதர்களின் குணங்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது இக்கவிதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்