தமிழின் இனிமை


முனைவர் ப.செல்வி,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை - 641044





  தமிழின் இனிமை

 ஆசிரியர் பாரதிதாசன்

 

மொழியை உயிராகக் கருதல் 

 

நன்கு கனிந்த பலாப் பழத்தினுடைய சுவையானது இனிமையைத் தரும் .

நன்கு முற்றிய கருப்பின் சாறு இனிமையைத் தரும் .நன்கு காய்ச்சிய பாகானது மிகுந்த சுவையைத் தரும்.பசுவின்  பாலானது மிகுந்த சுவையைத் தரும்

 தென்னை மரத்தின் குளிர்ச்சி பொருந்திய இளநீரானது சுவையைத் தரும்இவையெல்லாம் நம் நாவிற்குச் சுவையைத் தருவன என்றாலும் பாரதிதாசன் தமிழ் மொழியை என்னுயிர் என்பேன் கண்டீர் என்கிறார்.பாரதிதாசன் மொழியை உயிராகக் கருதுகின்றார் அதாவது இந்த உடலில் உயிர் இருந்தால் தான் இந்தச் சுவையை நாம் உணர முடியும் . பாரதிதாசன் மொழியை உயிராக கருதப்படுவது  இந்தச் செய்யுளின் வழி வெளிப்படுகிறது .

 

தமிழ்மொழியும் பாரதிதாசனும்  உடலும் உயிரும் 

 

சோலையில் உள்ள வண்டுகளின் ரீங்காரம் மற்றும் ஓடைப் புனலில் ஓசையும் புல்லாங்குழல் இருந்து வருகின்ற இசையும் வீணையிலிருந்து வரும் அமுதப் பண்ணும் குழந்தைகளின் மழலைப் பேச்சும் பெண்களின் இதழ்களில் வெளிப்படும் அமுத மொழியும் மிகுந்த இனிமையைத் தரும் எனினும் தமிழ் மொழியும் நானும் உடலும் உயிரும் போல என்று குறிப்பிடுகிறார்.

 

 உற்றார் உறவினர் அயலவர் ஆதல்

 

 அண்ணன் தம்பி உற்றார் உறவினர் அக்கம்பக்கத்தினர் கருணை மிகுந்த அன்னை என்னை போற்றி வளர்க்கும் தந்தை குயில் போல் பேசிடும்  மனைவி என்னுடைய புகழை மறவாத என்னுடைய தந்தை .  நான் அன்பின் காட்டி வளர்க்கும் என்னுடைய பிள்ளை இவர்களெல்லாம் அயலவர் ஆகின்றனர் எப்பொழுது என்றால் தமிழ்மொழி என் அறிவினில் கலக்கும் பொழுது .

 

காதிரவனின் இயற்கைக் காட்சி

நீலச் சுடர்மணி வானம் போன்ற ஒளி வீசுகின்ற அங்கே குளிரைத் தருகின்ற வெண்மையான நிலவு அதாவது அப்பொழுது கடல்மேல் எல்லாம் காலை கதிரவன் ஒளி வீசுகின்றன மாலையில் தூங்கும் நேரம் மலைகளின் இடையே காணப்படும் இன்பமான காட்சி இவையெல்லாம் மேலென்று எழுதுகின்ற கவிஞர் எழுதாமல் இருப்பாரா இருக்கலாமா என்று பாரதிதாசன் தமிழ் மொழியின் சிறப்பினை எழுதுகின்றார்

 

உணர்வை வளர்ப்பது தமிழே

  

செந்நெல் மாற்றிய சோறும்  பசுவின் தூய நெய்யால் சமைத்த காய்கறி வகைகளும் தானிய வகைகள் சமைத்த உணவுப் பொருட்கள்  கட்டித்தயிர் மிளகு ரசம் தேன் போன்று சுவையைத் தருகின்ற கிழங்கு வகைகளையும் பார்க்கும்பொழுதே நாவிற்கு இனிமைழயத் தரும் அப்பம் இவைகள்  நம் நாவிற்கு இனிமையை தந்தாலும் தமிழ்மொழியே இவையெல்லாம் உன்னை வளர்த்தாலும் உன்னுடைய உணர்வை வளர்ப்பது தமிழ் மொழியே என்று பாரதிதாசன் அதாவது தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவத்தைத் தருகின்றார் தமிழ் மொழியை உயிராகவும் அறிவாகவும் உணர்வாகவும்  கருதுகிறார் பாரதிதாசன். 

 

 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்