இடுகைகள்

சிறுபாணாற்றுப் படையில் இயற்கை வளங்கள்

முனைவர் ப.செல்வி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 சிறுபாணாற்றுப் படையில்   இயற்கை வளங்கள்   சிறுபானாற்றுப்படையின் ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூரைச் சார்ந்த நத்தத்தனார்.   இந்நூல் 269 அடிகளை உடையது . சிறிய யாழை வாசிப்போர் சிறுபாணர் என்றும் சீறியாழ் எனும் யாழினை வாசிப்போர் சிறுபாணர் என்ற குறிப்பும் உள்ளது . சிறுபாணரை ஆற்றுப்படுத்துவது   சிறுபாணாற்றுப் படை ஆகும் . ஆற்றுப்படை நூல்களில் அடி அளவில் குறைந்த நூலாணகும் . ஈந்நூலில் சேர , சோழ , பாண்டிய நாடு ஆகியவற்றின் பெருமைகள் மற்றும் கடையெழு வள்ளல்களின் சிறப்புக்கள் நல்லியக்கோடனின் படைச்சிறப்பும் கொடைச்சிறப்பும் இந்நூலில் காணலாகும் செய்திகளாகும் நெய்தல் நாட்டு வளம் கடற்கரையில் தாழை அன்னம் போன்ற மலரை வெளிப்படுத்தும் . செறுத்தி பொன் போன்ற நிறமுடைய மலர்களைத் தோற்றுவிக்கும் , முள்ளி நீலம் போன்ற மலரைத் தோற்றுவிக்கும் . இத்தகு மலர்கள் நிறைந்த கடற்கரை ஊர்களையும் குளங்களை...

Women Problems and solutions in Prabanjan Novel

பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும்   புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் ப . செல்வி , உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி , கோவை -641044 பிரபஞ்சனின் கனவு மெய்ப்பட வேண்டும்   புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் பெண்களுக்கு வீட்டுக்குள்ளேயும் பொது இடங்களிலும் சிக்கல்கள் மிகுதியாக உள்ளன . பெண்களைக் குடும்பத்தில் அடிமைகளாக நினைத்து அவர்களை இழிவாக நடத்தும் நிலையே வேதகாலமுதல் இன்றுவரை நிலவிவருகிறது . இந்நிலை மாறவேண்டும் . மனிதனின் சிக்கல்களை ஆழமாகவும்அழுத்தமாகவும்   வெளியிடுவதற்குப் புதினம் சிறந்த களமாக அமைகிறது . அவ்வகையில் பிரபஞ் ; சனின் கனவு மெய்ப்படவேண்டும் புதினத்தில் காணலாகும் மகளிர் சிக்கல்களையும் அச்சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் காண்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும் . மகளிர் சிக்கல்கள்        மகளிர் சிக்கல்களை இருவகையாகப் பிரிக்கலாம் . அவை அகச் சிக்கல்கள...