ஓடு ஓடு சங்கிலி
ஓடு ஓடு சங்கிலி சிற்பி ஓடு ஓடு சங்கிலியின் ஆசிரியர் சிற்பி. இவர் ஆத்துப் பொள்ளாச்சியில் பொன்னுசாமி கண்டியம்மாள் ஆகியோருக்குப் புதல்வனாக 29.07.1936 இல் பிறந்தார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவரின் முதல் கவிதை நிலவுப்பூ 1959 இல் வெளிவந்தது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் முன்னோடி. இவருடைய கவிதை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், மௌன மயக்கங்கள், சூரிய நிழல், கண்ணாடி சிறகுள்ள ஒரு பறவை, உரைநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், வரலாற்று நூல்கள் எனப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டுள்ளார் இவருடைய ஒரு கிராமத்து நதி எனும் கவிதைத் தொகுப்பு 2002 இல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. இத்தொகுப்பிலுள்ள ஓடு ஓடு சங்கிலி எனும் கவிதை பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது. அம்மாவின் நினைவுகள் சோர்ந்து போகும்போதெல்லாம் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுவதைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. கவிதையின் மையப்பொருள் தன்ன...