இடுகைகள்

புறநானூறு - 182

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 641044 புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர் !   பாடியவர் : கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுத ி திணை : பொதுவியல் துறை : பொருண்மொழிக் காஞ்சி உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம் . தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான் . அவர்கள் இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும் ‘ ஆ ஆ இனிது ’ என்று எண்ணி தான்மட்டும் உண்ணமாட்டார்கள் . உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள் . பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள் . புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பர் . பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள் . அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர் . இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது .

புறநானூறு - 67. அன்னச் சேவலே!

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 641044 புறநானூறு - 67. அன்னச் சேவலே! பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன், திணை: பாடாண். துறை: இயன்மொழி .   புலவர் மன்னன் தோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறர். அன்னச் சேவலே! போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை அருந்திய பின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய் ஆயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக. அங்கே அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “இரும்(பெருமை மிக்க) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)

புறநானூறு - 46

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 641044   புறநானூறு - 46.   அருளும் பகையும்   ! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி. குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது .   நீ புறாவின் துன்பம் போக்கிய சோழன் (சிபி) மரபில் வந்தவன். இந்தக் குழந்தைகள் நிலத்தை உழுது உண்ணும் உழவர்களின் துன்பத்தைக் கண்டு அச்சம் கொண்டு தன்னிடம் இருந்ததைப் பகிர்ந்து கொடுத்து உண்ட மன்னனின் மக்கள். உன் யானை தன்னை மிதிக்க வருவதைக் கண்டு தந்தை இல்லாமல் அழும் அழுகையை மறந்து நிறுத்திக் கொண்டவர்கள். அத்துடன் மன்றத்தில் புதியவர்கள் இருப்பதைக் பார்த்து மருண்டு பார்க்கும் மனநோவு உடையவர்கள். நான் சொல்லியனவற்றைக் கேட்டு எண்ணிப்பார்த்த பின்னர் நீ விரும்பியதைச் செய்க. (கிள்ளிவளவன் குழந்தைகளைக் கொல்வதை நிறுத்திவிட்டு அவர்களைப் பாதுகாத்தான்)

குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று ஒக்கூர் மாசாத்தியார்

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 641044   குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று   ஒக்கூர் மாசாத்தியார் (பரத்தையர் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.)     ஐய! இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது வேலிக்கு அயலில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக் காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினாற் போல இன்னாததாகிப் பரத்தையராற் கூறப்படும் பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக; நீ வாழ்வாயாக! கருத்து: எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.    

குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று - அம்மூவனார்

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044   குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று - அம்மூவனார் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.) (தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே ; யாரால். கடலே! பூழி நாட்டாரது சிறிய தலையையுடைய வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற மீனை உண்ணும் கொக்குகளையுடைய சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து வெள்ளிய பூவையுடைய தாழையை அலைகள் அலைக்கின்ற நடு இரவிலும் நினது ஆரவாரம் செவிப்படும்; நீ யாரால் வருத்த மடைந்தாய்? முடிபு: கடலே, கங்குலும் நின்குரல் கேட்கும்; யார் அணங்குற்றனை?        

குறுந்தொகை - 98. முல்லை - தலைவி கூற்று - கோக்குள முற்றனார்

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 குறுந்தொகை - 98. முல்லை - தலைவி கூற்று - கோக்குள முற்றனார் (தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது) தோழி! நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதலினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை கைக்கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இவ்வலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவர்பாற் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.

குறுந்தொகை : 63. பாலை - தலைவன் கூற்று

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 குறுந்தொகை   : 63. பாலை - தலைவன் கூற்று   உகாய்க்குடிகிழார்     ( பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.) - உகாய்க்குடிகிழார் நெஞ்சே! இரவலர்க்குக் கொடுத்தலும் இன்பங்களை அனுபவித்தலும் பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாநின்றாய்; அச்செயல் செய்தற்குத் துணையாக அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ? எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லுவாயாக. கருத்து:  இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.