குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று ஒக்கூர் மாசாத்தியார்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
குறுந்தொகை
- 139. மருதம் - தோழி கூற்று ஒக்கூர் மாசாத்தியார்
(பரத்தையர் வீட்டிற்குச் சென்ற
தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி
கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.)
ஐய!
இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது வேலிக்கு அயலில் உள்ள காட்டுப்
பூனையின் கூட்டம் மாலைக் காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய
இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை
அழைத்துக் கூவினாற் போல இன்னாததாகிப் பரத்தையராற் கூறப்படும் பழி மொழியோடு எம்முடைய
தெருவிற்கு வருதலை ஒழிவாயாக; நீ வாழ்வாயாக!
கருத்து: எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக