குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று - அம்மூவனார்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044
குறுந்தொகை
- 163. நெய்தல் - தலைவி கூற்று - அம்மூவனார்
வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.) (தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி
காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால்.
கடலே! பூழி நாட்டாரது
சிறிய தலையையுடைய வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற மீனை உண்ணும் கொக்குகளையுடைய சோலை
சூழ்ந்த பெரிய துறையினிடத்து வெள்ளிய பூவையுடைய தாழையை அலைகள் அலைக்கின்ற நடு இரவிலும்
நினது ஆரவாரம் செவிப்படும்; நீ யாரால் வருத்த மடைந்தாய்?
முடிபு: கடலே, கங்குலும் நின்குரல் கேட்கும்; யார் அணங்குற்றனை?
கருத்துகள்
கருத்துரையிடுக