குறுந்தொகை : 63. பாலை - தலைவன் கூற்று
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044
குறுந்தொகை : 63. பாலை - தலைவன் கூற்று
உகாய்க்குடிகிழார்
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி,
"பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது"
என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
- உகாய்க்குடிகிழார்
நெஞ்சே! இரவலர்க்குக் கொடுத்தலும் இன்பங்களை அனுபவித்தலும்
பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாநின்றாய்;
அச்செயல் செய்தற்குத் துணையாக அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ? எம்மை மட்டும்
செலுத்துகின்றாயோ? சொல்லுவாயாக.
கருத்து: இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.
கருத்துகள்
கருத்துரையிடுக