கலித்தொகை - 25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
முனைவர் ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை – 641044 கலித்தொகை - 25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு அவனே தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக் காப்பாற்றினான். அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டபோது ஆண்யானை அந்தத் தீயைக் காலால் மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு அது. இத்தகைய கொடிய காட்டைக் கடந்து செல்லும் ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க. சிறப்புச் செய்தவர் பக்கத்தில் இருக்கும்போது அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு அவர் அகன்றவுடன் அவரைப் பழித்துத் தூற்றும் அற்பர் போல, காதலர் தழுவும்ப...