கலித்தொகை - 25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
கலித்தொகை - 25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
வயக்குறு
மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின்
பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன்
சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர்.
துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு அவனே தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக்
காப்பாற்றினான். அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டபோது ஆண்யானை அந்தத்
தீயைக் காலால் மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு அது. இத்தகைய
கொடிய காட்டைக் கடந்து செல்லும் ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க.
சிறப்புச்
செய்தவர் பக்கத்தில் இருக்கும்போது அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு அவர் அகன்றவுடன் அவரைப்
பழித்துத் தூற்றும் அற்பர் போல, காதலர் தழுவும்போது மலர் போல இருந்ததுவிட்டு, காதலர்
அகன்றதும் இவள் கண்கள் அழுகின்றன.
செல்வரோடு
சேர்ந்திருந்து உண்டு மகிழ்ந்துவிட்டு, செல்வர் நிலை தளர்ந்தபோது, எண்ணிப் பார்க்காமல்
இருக்கும் உணர்வில்லாதவர் போல, காதலர் இன்பம் தரும்போது தோளில் இருந்துவிட்டு, அவர்
நீங்கியவுடன் தோள்வளையல் கழன்று ஓடுகின்றன.
நண்பனின்
உள்ளத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைச் சேர்ந்திருக்கும் நாளில் தெரிந்துவைத்துக்கொண்டு
அவனிடமிருந்து பிரிந்த காலத்தில் அவற்றைப் பிறருக்குச் சொல்லும் பெருமையில்லாவர் நட்பைப்
போல் நீ காதலின்பக் கொடை நல்கும்போது ஒளி திகழ இருந்துவிட்டு, ஒருநாள் காதலர் பிரிந்ததும்
இவள் நெற்றி பசப்பு ஊர்ந்து கிடக்கிறது.
என்றெல்லாம்
நான் உனக்குக் கூறுவதால் என்ன பயன்? எல்லாமே உனக்கு நன்றாகத் தெரியும். வானம் பொழியாவிட்டால்
வாடும் இந்த உலகம் போல, நீ அளி செய்யாவிட்டால் இவள் அழகெல்லாம் வாடிப் போகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக