நற்றிணை – 91 - பிசிராந்தையார்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை – 641044
நற்றிணை – 91 தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. - பிசிராந்தையார்
தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன்
போலும்;
கருத்துகள்
கருத்துரையிடுக