அகநானுறு – 155 பாலைத்திணைப் பாடல் – பாலை பாடிய பெருங்கடுங்கோ

 முனைவர் .செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை – 641044


அகநானுறு – 155 பாலைத்திணைப் பாடல் – பாலை பாடிய பெருங்கடுங்கோ

அறம் செய்வதே வாழ்க்கை. அதில் கடைப்பட்ட நிலை கூடாது. வாழ்க்கைக்காகப் பிறர் வாசற்படிக்குச் செல்லக்கூடாது. செல்வம் இந்த இரண்டு நெறிநிலைகளையும் செய்யும் என்று என் கூந்தலை நீவிக்கொண்டே சொல்லியவர் பொருளீட்டச் சென்றுள்ளார். அணிகல ஒப்பனை பூண்டவளே! கேள்.

நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. அவர் தம் செயலைச் செய்து முடிக்க வேண்டும். தோழி! இதைத்தான் நான் விரும்புகிறேன்.

கோவலர் பாழ்நிலத்தில் கூவல் குழி தோண்டி, ஆனிரைகளை நீண்ட விளி செய்து அழைத்து, நீருண்ணச் செய்வர். நீருக்காக நா காய்ந்து வருத்தமுடன் வரும் யானை அந்த வளைந்த வாயை உடைய பத்தல்-குழியில் நீர் அருந்ததிய காலடிச் சுவடு இருக்கும். அந்த ஈரச் சுவட்டில் புலியின் காலடிச் சுவடும் பதிந்திருக்கும்.

யாழிசை கூட்டும் வயிரியர் குற்றமற்ற நாவால் பாடுவர். அவர் பாடலுக்கு ஏற்பக் கையால் கொட்டும் முரசு முழக்கப்படும். கைவிரல் பதிவு அந்த முரசில் பதிந்திருக்கும். அந்தப் பதிவு போல யானைக் காலடியில் புலியின் காலடி பதிந்திருக்கும். அந்தக் காலடிப் பதிவுள்ள மலை வழியில் அவர் சென்றுள்ளார். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்