சித்தர் பாடல்கள் - சிவவாக்கியர் பாடல்கள்
முனைவர் ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை – 641044 சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள் ஓடி ஓடி உட்கலந்த ஜோதி வடிவை நாம் நாடிநாடி நம்முடைய நாட்கள் கழிந்து போகின்றன .வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் இப்படி இறையைத் தேடியே மாண்ட மனிதர்கள் பலர் கோடிகோடி எண்ணிறந்த கோடியே.இறைவன் நம் மனத்துள்ளே இருக்கின்றார் என்பதை உணராமல் நாம் ஓடி ஓடி நம்முடைய வாழ்க்கையைக் கழிக்கின்றோம். மாறுபட்டு இருந்து மாறுபட்டு மணிகளை நன்கு விளக்கி வண்டுகள் சேகரித்த தேனைக் கொண்டு போய் ஒரு கல்லின் மீது ஊற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் கூறுபோட்டு தீர்க்கவும் குருக்கள் பாதத்தில் வைக்கின்றேன். மனிதர்கள் மூடநம்பிக்கையால் கல்லின் மீது பாலையும் தேனையும் ஊற்றி வீணாக்குகின்றனர். எத்தனையோ குழந்தைகள் பசிக்கு அழுது துன்பப் படுகின்ற நிலையை நாம் இன்னும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். கோயில் இது குறித்து கோயிலும் குளங்களும் கும்பிட...