இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலித்தொகை - 25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ

  முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044   கலித்தொகை -  25 பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு அவனே தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக் காப்பாற்றினான். அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டபோது ஆண்யானை அந்தத் தீயைக் காலால் மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு அது. இத்தகைய கொடிய காட்டைக் கடந்து செல்லும் ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க.   சிறப்புச் செய்தவர் பக்கத்தில் இருக்கும்போது அவரைப் புகழ்ந்து பேசிவிட்டு அவர் அகன்றவுடன் அவரைப் பழித்துத் தூற்றும் அற்பர் போல, காதலர் தழுவும்ப...

நற்றிணை – 91 - பிசிராந்தையார்

  முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044 நற்றிணை – 91 தோழி , தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது . -  பிசிராந்தையார் தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய ; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை ; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து , மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற ; கடற்கரைச் சோலையையும் ( அழகிய ) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற ; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல் ; நீண்ட கடற்கரைத் தலை...

நாண்மணிக் கடிகை

  முனைவர்   ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ   இராமகிருஷ்ணா   மகளிர்   கலை   மற்றும்   அறிவியல்   கல்லூரி , கோவை  – 641044 நாண்மணிக் கடிகை வீடுபேறு அடைய அறம் செய்ய வேண்டும் நெல்லும் , கரும்பும் , வயலுக்கு அழகு சேர்க்கும் . தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும் . நாணம் பெண்ணுக்கு அழகு . மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும் ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும் . ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும் . நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும் . பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும் குடிகள் , அரசனது ஆட்சியால் உயிர் வாழும் . குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும் . உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும் . எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான் . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் மலரிருக்கும் இடத்தை அதன் மணம் ...

அகநானுறு – 155 பாலைத்திணைப் பாடல் – பாலை பாடிய பெருங்கடுங்கோ

  முனைவர் ப . செல்வி , இணைப்பேராசிரியர் , தமிழ்த்துறை , ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை – 641044 அகநானுறு – 155 பாலைத்திணைப் பாடல் – பாலை பாடிய பெருங்கடுங்கோ அறம் செய்வதே வாழ்க்கை. அதில் கடைப்பட்ட நிலை கூடாது. வாழ்க்கைக்காகப் பிறர் வாசற்படிக்குச் செல்லக்கூடாது. செல்வம் இந்த இரண்டு நெறிநிலைகளையும் செய்யும் என்று என் கூந்தலை நீவிக்கொண்டே சொல்லியவர் பொருளீட்டச் சென்றுள்ளார். அணிகல ஒப்பனை பூண்டவளே! கேள். நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. அவர் தம் செயலைச் செய்து முடிக்க வேண்டும். தோழி! இதைத்தான் நான் விரும்புகிறேன். கோவலர் பாழ்நிலத்தில் கூவல் குழி தோண்டி, ஆனிரைகளை நீண்ட விளி செய்து அழைத்து, நீருண்ணச் செய்வர். நீருக்காக நா காய்ந்து வருத்தமுடன் வரும் யானை அந்த வளைந்த வாயை உடைய பத்தல்-குழியில் நீர் அருந்ததிய காலடிச் சுவடு இருக்கும். அந்த ஈரச் சுவட்டில் புலியின் காலடிச் சுவடும் பதிந்திருக்கும். யாழிசை கூட்டும் வயிரியர் குற்றமற்ற நாவால் பாடுவர். அவர் பாடலுக்கு ஏற்பக் கையால் கொட்டும் முரசு முழக்கப்படும். கைவிரல் பதிவு அந்த முரசில் பதிந்திரு...

அகநானுறு – 34 மருதன் இளநாகனார் பாடல்

முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை – 641044 அகநானுறு – 34 மதுரை   மருதன்   இளநாகனார் பாடல்     முல்லைத்திணைப்பாடல் வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் பாடல் சிறிய கரிய பிடாவின் , வெள்ளிய உச்சியினையுடைய குறிய புதர் , மாலை போல மலரும் ,   குளிர்ந்த நறிய முல்லை நிலத்தில் , செருப்பு அணிந்த தானையுடைய வேட்டுவன் , கவைக் கோலைச் சுமந்தாலொத்த , பெரிய முறுக்குடைய கோட்டினையுடைய , பெருமை தங்கிய ஆண்மான்கள் , நெருங்கிய இலைகளையுடைய அறுகினது சிறந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை , மறிவிளையாடும் பக்கத்தினை யுடைய இளைய பெண்யானை அருந்தச் செய்த , தெளிந்த அறல்நீர் தழுவிச் செல்லும் நெடிய மணல் சார்ந்த கரைகளில் , அசைவிடும் கவுளினை யுடையவாய் , அவை துயிலும் இடத்தைக் காவல் செய்திருக்கும் , பெருந்தன்மையினைக் கண்டு அவை போலத் தலையளி செய்திலமே என்று தளர்ந்த நெஞ்சம் இன்பம் அடையவும் ; ஆடைகளிலே தோய்ந்த...