கலித்தொகை 51 – குறிஞ்சிக் கலி
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044
கலித்தொகை 51 – குறிஞ்சிக் கலி
தலைவி கூற்று
புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.
சுடரும் வளையல் அணிந்தவளே கேள். அன்று ஒருநாள் நாம் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடினோம். அப்போது, அங்கு ஒருவன் வந்தான். தன் காலால் நம் மணல்வீட்டைக் கலைத்தான். நாம் சூடியிருந்த மாலைகளைப் பரித்துக்கொண்டான். நம் பந்துகளையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.
இப்படியெல்லாம் நமக்குத் துன்பம் உண்டாக்கியவன் அவன். குறும்பு செய்யும் பட்டிக் காளை போன்றவன் அவன், பின்னர் ஒருநாள் வந்தான். என் தாயும் நானும் வீட்டில் இருந்தோம். “தண்ணீர் தாகமாக இருக்கிறது” என்றான். என் தாய் அடர்ந்த பொன் கிண்ணத்தில் தண்ணீர் மொண்டுகொண்டு வந்தாள். சுடரும் அணிகலன் பூண்டவளே!
அவன் நீர் உண்ணும்படிச் செய்துவிட்டு வா - என்றாள். நானும் முன்பு குறும்பு செய்த அவன் என்று அறியாமல் சென்றேன். அவன் வளையலணிந்த என் கையைப் பற்றி இழுத்துத் துன்புறுத்தினான். நான் மருண்டுபோனேன். “அன்னாய், இவன் ஒருவன் செய்வதைப் பார்” என்று கூச்சலிட்டேன். என் தாய் அலறிக்கொண்டு ஓடிவந்தாள்.
“உண்ணும் தண்ணீர் விக்கினான்” என்றேன். அன்னை அவன் பிடரியை நீவினாள்.
அவனோ என்னைக் கடைக்கண்ணால் பார்த்தான். கொல்பவன் போலப் பார்த்தான்.
அவனும் நானும் சிரித்துக்கொண்டோம்.
அவன் திருடன் மகன். காதல் திருடன்.
கருத்துகள்
கருத்துரையிடுக