குறுந்தொகை - 38. குறிஞ்சி - தலைவி கூற்று - : 38 கபிலர்
முனைவர் ப.செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை - 641044
குறுந்தொகை : 38 குறிஞ்சி - தலைவி கூற்று கபிலர்.
(தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?’’ என்று வினாவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)
தோழி!
காட்டிலுள்ள
மயிலானது
பாறையில்
ஈன்ற
முட்டைகளை
வெயிலில்
விளையாடும்
முசுவின்
குட்டி
உருட்டுதற்கு
இடமாகிய
மலைநாட்டையுடையவனாகிய
தலைவனது
நட்பு
அவன்
பிரிய
மை
தீட்டப்பெற்ற
கண்ணினின்று
பெருகும்
நீரோடு
ஒருபடியாக
அப்பிரிவை
நினைந்து
வருந்தாமல்
பொறுத்துக்கொள்ளுதலில்
வன்மையுடையோர்க்கு
மாத்திரம்
எக்காலத்தும்
மிக
நல்லதாகும்.
கருத்து: தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலேனாயினேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக